பாஜகவுக்கு ஓடிவந்துட்டா சரத்பவாருக்கு 2 'செம வெயிட்டா'ன ஆஃபர்.. 'தரகு' வேலையில் அஜித் பவார் படுபிஸி!
மும்பை: தேசியவாத காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துவிட்டால் அக்கட்சித் தலைவர் சரத்பவாருக்கு என்ன என்ன பதவிகள் கிடைக்கும்? சரத்பவார் மகளுக்கு என்ன பதவி வழங்கப்படும் என பட்டியலை அஜித்பவார் கொடுத்துள்ளார் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கு காங்கிரஸை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ளன. "இந்தியா" கூட்டணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் முக்கிய கட்சியாக உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவு, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பிரிவு என சிதறு தேங்காய்கள்தான் பாஜகவின் அணியில் உள்ளன. ஆனால் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணி, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி ஆகியவை எதிர்க்கட்சிகளின் அணியாக உள்ளன.

இதனாலேயே "இந்தியா" கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆனால் மும்பையில் "இந்தியா" கூட்டணி கட்சி கூட்டம் நடைபெறும் போது அந்த அணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை முழுமையாக வெளியேற்றி தங்களது அணிக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் பாஜக படுதீவிரமாக இருக்கிறது. இதற்காகவே அஜித்பவார் தொடர்ந்து சரத்பவாருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே, பிரதமர் மோடியுடன் சரத் பவார் ஒரே மேடையில் பங்கேற்றார்.
சரத்பவாரை இழுப்பதற்காக பாஜக பேசிவரும் பேரங்கள் தொடர்பான தகவல்களை காங்கிரஸ் தரப்பு வெளியிட்டிருக்கிறது. அதாவது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 2024 லோக்சபா தேர்தலில் ஆதரவு என சரத்பவார் அறிவித்தார் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி அல்லது நிதி ஆயோக் தலைவர் பதவி வழங்கப்படுமாம்; அதேபோல அவரது மகள் சுப்ரியா சுலே மற்றும் பிரஃபுல் பட்டேல் ஆகியோருக்கும் மத்திய அமைச்சர் பதவிகள் வழங்கப்படுமாம். இந்த பேரங்களை முன்வைத்துதான் அஜித் பவார் இடைவிடாமல் சரத்பவாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள். ஆனாலும் சரத்பவார் இன்னமும் இறங்கிவராமல், பிடி கொடுக்காமல்தான் இருக்கிறார். ஆகையால் அனைவரும் பொறுத்திருந்துதான் முடிவ்களைப் பார்க்க வேண்டும் என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications