மும்பை ”இந்தியா” கூட்டணி கூட்டம்: ஆக.31-ல் சின்னம் வெளியீடு- என்னவா இருக்கும்?
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தின் முதல் நாளில் "இந்தியா" கூட்டணியின் சின்னம் வெளியிடப்படும் என்று உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1-ந் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது.

மும்பையில் நடைபெறும் "இந்தியா" கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சரத்பவார், நிதிஷ்குமார், மமதா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏற்கனவே கூட்டணியில் இடம்பெற்றுள்ள மொத்தம் 26 கட்சிகளின் தலைவர்கள், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உட்பட 6 மாநிலங்களின் முதல்வர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சில புதிய கட்சிகள் இந்தக் கூட்டணில் இணைகின்றன. உத்தரப்பிரதேசத்தில் இருந்தும் ஒரு அரசியல் கட்சி மும்பை கூட்டத்தில் இணைய உள்ளது.
மும்பையில் நடைபெறும் "இந்தியா" கூட்டணி ஆலோசனை கூட்டத்தில், பொது செயல் திட்டம், தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்படும். மேலும் பிரதமர் வேட்பாளர் யார் என்கிற விவாதமும் நடைபெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

மும்பை "இந்தியா" கூட்டணி கூட்டம் தொடர்பாக உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது: "இந்தியா" கூட்டணிக்கான பொது சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. மும்பையில் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறும் ஆகஸ்ட் 31-ந் தேதி இரவு 7 மணிக்கு இந்த சின்னம் வெளியிடப்படும். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications