அந்த கோலத்தில் பார்த்த மாமியார்.. கள்ளக்காதலனுடன் மருமகள்.. நினைத்தாலே நடுங்க வைக்கும் தண்டனை
மும்பை: கள்ளக்காதல் விவகாரத்தில் சமூகத்தில் அவமானம் தரும் விஷயமாக இருந்தாலும், சட்டத்தின் பார்வையில் அப்படி இல்லை.. சட்ட ரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு தான் நிலைமை உள்ளது. இதனால் கள்ளக்காதல் ஜோடிகள் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று திருமணம் செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் தவறான முடிவெடுக்கிறார்கள். அதேபோல் தான் உறவினர்களும், அவர்களுக்கு மோசமான தண்டனை தருகிறார்கள். அப்படித்தான் கள்ளக்காதல் ஜோடியை அடித்து உதைத்து அவர்களின் கை, கால்களை கட்டி கிணற்றில் தள்ளியிருக்கிறார்கள். பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்காதல் சமூகத்தில் மோசமான களைச்செடி போல் அதிகரித்து வருகிறது. உறவுகளுக்குள் சிக்கலை ஏற்படுத்துகிறது. நன்றாக செல்லும் குடும்ப உறவில், திடீரென ஆண் அல்லது பெண் மீது துணையாக இருப்பவர் திருமணத்தை மீறிய உறவை ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த புதிய உறவுக்காக எந்த எல்லைக்கும் போகிறார்கள். அது கற்பனை செய்ய முடியாத சிக்கலை ஏற்படுத்துகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

மகாராஷ்டிரா மாநிலம், நாந்தெட் மாவட்டம் போர்ஜூனி கிராமத்தை சேர்ந்த சஞ்சீவானி என்பவருக்கு கடந்த ஆண்டு கல்யாணம் நடந்தது. சஞ்சீவானி தனது கணவருடன் அருகே உள்ள கோலேகாவ் கிராமத்தில் வசித்து வந்துள்ளார் இந்தநிலையில் அவருக்கு லகான் பண்டாரே என்ற இளைஞருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. கள்ளக்காதலன் அந்தப்பெண்ணை அவரது வீடு தேடிச்சென்று சந்தித்து வந்தாராம்.
இது பெண்ணின் மாமியாருக்கு தெரியவரவே அவர்கள், கள்ளக்காதல் ஜோடியை தீவிரமாக கண்காணிக்க தொடங்கினார். நேற்று முன்தினம் தனது மருமகளையும், அவரது கள்ளக்காதலனையும் கையும், களவுமாக பிடித்து பெண்ணின் பெற்றோருக்கு தகவல் அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை, தாத்தா மற்றும் உறவினர் ஒருவர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தங்களது குடும்ப பெண் கள்ளக்காதலனுடன் சிக்கியதை கண்டு கொதித்து போனார்கள்.
கள்ளக்காதல் ஜோடியான சஞ்சீவானி, லகான் பண்டாரேயை அங்கிருந்து அழைத்து சென்றனர். போகும் வழியில் இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்கள். பின்னர், கக்ராலா பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கள்ளக்காதல் ஜோடியின் கை, கால்களை கட்டி அவர்களை கிணற்றுக்குள் வீசி கொன்றனர். இதற்கிடையே நேற்று காலை அந்த கிணற்றில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் பிணம் மிதப்பதாக கிடைத்த தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர், கிணற்றில் இருந்து சஞ்சீவானி, லகான் பண்டாரேயின் உடல்களை மீட்டனர்.
இதற்கு மத்தியில் பிணமாக மீட்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் உள்பட குற்றத்தில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications