மகாராஷ்டிரா: 288 சட்டசபை தொகுதிகளில் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல்- அக்.29 கடைசி நாள்!
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் 288 தொகுதிகளிலும் இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி நடைபெறும் நிலையில் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய அக்டோபர் 29-ந் தேதி கடைசி நாளாகும். மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ந் தேதி பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் பாஜக முந்திக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இன்று மகா விகாஸ் அகாடியின் தொகுதிப் பங்கீட்டு விவரங்கள் வெளியாக இருக்கிறது.
மகாராஷ்டிராவில் தேர்தலை அமைதியாகவும் சுமூகமாகவும் நடத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இம்மாநிலத்தில் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. மகாராஷ்டிராவில் வேட்புமனுத் தாக்கல் செய்ய அக்டோபர் 29-ந் தேதி கடைசி நாளாகும். மகாராஷ்டிராவில் அடுத்த சில நாட்களில் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிடுவர் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications