"சனாதன தர்மத்தை அவமதித்தால் விடமாட்டோம்.." மகாராஷ்டிராவில் பொங்கிய பவன் கல்யாண்
மும்பை: சனாதன தர்மத்தை பின்பற்றும் நாங்கள் மதத்தை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் மதிப்பளிக்கிறோம். சனாதன தர்மத்தை அவமதித்தால் தக்க பதிலடி கொடுப்போம். ஆர்.எஸ் எஸ் ஆதரவு இல்லாமல் இந்தியா இன்றைய வலுவான நிலையில் இருந்து இருக்க முடியாது என்று பவன் கல்யாண் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியை ஆதரித்து பவன் கல்யாண் பிரசாரம் மேற்கொண்ட போது இவ்வாறு கூறினார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக , சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிக்கும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) ஆகிய கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இதுதவிர ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா, பகுஜன் சமாஜ், வஞ்சித் பகுஜன் அகாடி கட்சிகளும் தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன. பிரசாரம் இன்றுடன் ஓய உள்ள நிலையில், பாஜக கூட்டணிக்கு ஆதரவாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தீவிர பிரசாரம் மேற்கோண்டு வருகிறார். அந்த வகையில் பல்லார்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், சனாதன தர்மத்தை அவமதித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பேசியுள்ளார்.
இது தொடர்பாக பவன் கல்யாண் கூறியதாவது:- சனாதன தர்மத்தை பின்பற்றும் நாங்கள் மதத்தை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் மதிப்பளிக்கிறோம். சனாதன தர்மத்தை அவமதித்தால் தக்க பதிலடி கொடுப்போம். ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இல்லாமல் இந்தியா இன்றைய வலுவான நிலையில் இருந்து இருக்க முடியாது. சிவாஜி மன்னர் மற்றும் பாலாசாகேப் தாக்கரேவை ஊக்கமாக எடுத்துக்கொண்டுதான் எனது கட்சி தொடங்கப்பட்டது.
மகாராஷ்டிராவின் வளர்ச்சி மற்றும் சனாதன தர்மத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என நான் மக்களிடம் கோரிக்கை வைக்கிறேன். இந்தியா தற்பொது பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக உள்ளது. மூன்றாவது இடத்திற்கு கொண்டு வர தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடுமையாக உழைக்கிறது. இந்த வளர்ச்சி தடைபட்டு விடக்கூடாது. எனவே, அனைவரும் தங்கள் வாக்கினை சரியான வேட்பாளருக்கு பதிவு செய்ய வேண்டும்.
தேசத்தை பிளவுபடுத்த பலர் விரும்புகிறார்கள். எனினும், நாம் ஒற்றுமையாக இருந்து தேசத்தை வலுப்படுத்துவதோடு உள்ளூர் மக்களின் கலாசாரத்தை மதிக்க வேண்டும்" என்றார். ஆந்திராவில் ஜனசேனா கட்சி என்ற கட்சியை நடத்தி வரும் பவன் கல்யாண், கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தார்.
சந்திரபாபு நயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆந்திர துணை முதல்வராக பவன் கல்யாண் பதவி வகித்து வருகிறார். தீவிர இந்துத்துவா ஆதரவாளராக தன்னை காட்டிக்கொள்ளும் பவன் கல்யாண், தனது கட்சியில் சனாத தர்மத்தை பாதுக்காக ஜனசேனா கட்சிக்குள் நரசிம்ம வராஹி படை என்ற புதிய அணியை தொடங்குவதாக கூறியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications