மகாராஷ்டிரா: கேப்டன் தமிழ்ச்செல்வன் vs கணேஷ்குமார்.. தமிழர்கள் மோதும் சயோன் கோலிவாடா நிலவரம் என்ன?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சயோன் கோலிவாடா சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழர் கேப்டன் தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் வேட்பாளராக தமிழர் கணேஷ்குமார் போட்டியிடுவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா வாழ் தமிழர்கள் சயான் கோலிவாடா தொகுதியின் தேர்தல் முடிவை பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் தமிழர்களை அதிகமாக கொண்ட தொகுதி சயோன் கோலிவாடா . இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,56,232; பெண் வாக்காளர்கள் 1,26,961. கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன் 54,845 வாக்குகளையும் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட கணேஷ்குமார் 40,894 வாக்குகளையும் பெற்றனர். கேப்டன் தமிழ்ச்செல்வன், இந்த தொகுதியில் 2 முறை வென்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர். தற்போது 3-வது முறையாக களம் காண்கிறார். கேப்டன் தமிழ்ச்செல்வனை எதிர்த்து மீண்டும் தமிழரான கணேஷ்குமார் களத்தை சந்திக்கிறார்.

இந்த தொகுதியில் போட்டியிடும் கேப்டன் தமிழ்ச்செல்வன் கூறுகையில், சயோன் கோலிவாடா தொகுதியின் அடிப்படையான குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 10 ஆண்டுகாலமாக தொடர் நடவடிக்கை எடுத்துள்ளேன். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளேன் என்கிறார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளரான கணேஷ்குமார், 10 ஆண்டுகளாக எந்த ஒரு திட்டமுமே சயோன் கோலிவாடா தொகுதி மக்களுக்கு கிடைக்கவே இல்லை என்கிறார். இந்த தொகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்தான் பிரதான பிரச்சனையாக இருந்து வருகிறது.
சயோன் கோலிவாடா தொகுதியில் ராஜ்தாக்கரேவின் நவநிர்மாண் சேனாவின் சஞ்சய் பிரபாகர் போகலே உட்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இத்தொகுதியில் 3-வது முறையாக கேப்டன் தமிழ்ச்செல்வனே வாகை சூடி ஹாட்ரிக் சாதனை படைப்பாரா? அல்லது மாற்றத்தை விரும்பி காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ்குமார் வெல்வாரா? என்பதை மகாராஷ்டிரா வாழ் தமிழர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications