மகாராஷ்டிரா: புதிய அரசு நாளை பதவியேற்பு: மோடி, 10 மத்திய அமைச்சர்கள், 19 முதல்வர்கள் பங்கேற்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு நாளை பதவியேற்க உள்ளது. மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான மகாராஷ்டிரா முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, 10 மத்திய அமைச்சர்கள் மற்றும் 19 மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பதவியேற்பு விழாவில் சுமார் 2,000 பேர் பங்கேற்கும் வகையில் அசத்தலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகக் கூடும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. ஆனால் முதல்வர் பதவி மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவகாரத்தில் புதிய கூட்டணி அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக அணி வெற்றிக்கு முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டேதான் காரணம்; அவரது தலைமையில்தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது; ஆகையால் ஏக்நாத் ஷிண்டேவை அங்கீகரித்து அவருக்கே முதல்வர் பதவி தர வேண்டும் என்பது சிவசேனாவின் கோரிக்கை. ஆனால் பாஜக இதனை நிராகரித்தது.
இதில் அதிருப்தி அடைந்த ஏக்நாத் ஷிண்டேவை பிரதமர் மோடி சமாதானப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவியும் உள்துறையும் ஒதுக்க வேண்டும்; சிவசேனாவுக்கு சபாநாயகர் பதவி தர வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே அடம்பிடித்தார். இதனால் சிவசேனா- பாஜக இடையே மோதல் வெடித்தது. இந்த விவகாரத்திலும் ஏக்நாத் ஷிண்டே கடும் கோபமடைந்தார். இந்த கோபத்தின் வெளிப்பாடாக, பாஜகவுடனான பேச்சுவார்த்தைகளை சிவசேனா நடத்தவில்லை.
ஆனாலும் மகாராஷ்டிராவில் புதிய அரசு வியாழக்கிழமை பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டது. புதிய முதல்வர், அமைச்சர்கள் விவரங்கள் இறுதி செய்யப்படாமலேயே இந்த அறிவிப்பு வெளியானது. இந்த பின்னணியில் நேற்று ஏக்நாத் ஷிண்டேவை மும்பையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை சுமார் 1 மணிநேரம் நடைபெற்றது. இன்னொரு பக்கம், முக்கியமான துறைகளை பெறுவதற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் டெல்லி சென்று பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்தார்.
இந்த பின்னணியில் மகாராஷ்டிராவில் புதிய அரசு நாளை பதவியேற்க உள்ளது. மும்பை ஆசாத் மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, 10 மத்திய அமைச்சர்கள், 19 மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர். மேலும் சுமார் 2,000 முக்கிய பிரமுகர்களும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மும்பையில் நாளை பதவியேற்பு விழா நடைபெறுவதால் போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மும்பை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications