மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் நாளை ஆளுநரை சந்திக்கும் பாஜக.. பட்னாவிஸ் அனுப்பும் ஸ்பெஷல் கடிதம்.. என்ன திட்டம்!?

மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏக்கள் குழு நாளை அம்மாநில ஆளுநர் பகத் சிங்கை சந்திக்க இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏக்கள் குழு நாளை அம்மாநில ஆளுநர் பகத் சிங்கை சந்திக்க இருக்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.

சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. இதனால் பாஜக அங்கு ஆட்சி அமைக்க முடியாமல் கடுமையான இழுபறியை சந்தித்து வருகிறது.

என்ன இழுபறி

என்ன இழுபறி

இந்த நிலையில் வரும் 9ம் தேதியோடு பாஜக ஆட்சி அம்மாநிலத்தில் முடிவிற்கு வருகிறது. அதற்கு புதிய கட்சி பொறுப்பேற்க வேண்டும். இதனால் பாஜக உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய கடும் கட்டாயத்தில் இருக்கிறது. பாஜக தலைவர்கள் இதனால் அதிக டெங்ஷனில் இருக்கிறார்கள்.

நாளை பாஜக

நாளை பாஜக

இந்த நிலையில் நாளை அம்மாநில பாஜக எம்எல்ஏக்கள் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்திக்க உள்ளனர். மகாராஷ்டிராவில் அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சி என்று முறையில் அவர்கள் ஆளுநரை சந்திக்கிறார்கள். பாஜக எம்எல்ஏக்கள் இந்த சந்திப்பில் உடன் இருக்கிறார்கள்.

மெசேஜ்

மெசேஜ்

அதேபோல் இதில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் அளித்த கடிதம் ஒன்றையும் ஆளுநரிடம் பாஜகவினர் தர இருக்கிறார்கள். இதில் ஸ்பெஷல் மெசேஜ் இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இது என்ன மாதிரியான கடிதம். இதில் என்ன தகவல்கள் இருக்கும் என்ற விவரம் வெளியாகவில்லை.

சிவசேனா

சிவசேனா

ஆனால் இதற்கு இன்னும் சிவசேனா தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சிவசேனா தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கிறது. முதல்வர் பதவி கொடுத்தால் மட்டுமே ஆட்சிக்கு ஆதரவு தருவோம் என்று உறுதியாக கூறிவிட்டது.

நாளை நம்பிக்கை

நாளை நம்பிக்கை

இதனால் நாளை பாஜக தலைவர்கள் எந்த நம்பிக்கையில் ஆளுநரை சந்திக்க இருக்கிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. நாளை பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோர அதிக வாய்ய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். நாளைக்குள் சிவசேனா தனது முடிவை மாற்றுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

English summary
Maharashtra: BJP to meet governor tomorrow, Sena Says starts worrying about it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X