OneIndia Exclusive: எதிரிக்கு எங்கு அடித்தால் வலிக்குமோ.. அங்கு அடிப்பதே மோடி ஸ்டைல்!- ஏக்நாத் ஷிண்டே
மும்பை: நமது ஒன் இந்தியா தளத்திற்குப் பிரத்தியேகமாகப் பேட்டியளித்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசினார். பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய அவர், எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவதாகவும் சாடியுள்ளார்.
நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

ஏக்நாத் ஷிண்டே: இதற்கிடையே நமது ஒன் இந்தியாவுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி அளித்த ஏக்நாத் ஷிண்டே, நாட்டிற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்குத் தனது ஆதரவு எப்போதும் இருக்கும் எனத் தெரிவித்தார். மேலும், பல்வேறு வழிகளில் அரசுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.
பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறியது சர்ச்சையானது. இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஏக்நாத் ஷிண்டே எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து.. நமது நாட்டிற்குத் துரோகம் செய்கின்றன. பிரதமர் மோடியின் தலைமையிலான புதிய இந்தியா, எதிரி நாடுகளுக்கு எங்கு அடித்தால் வலிக்கும் என்பதைத் தெரிந்து தாக்குகிறது..
நடவடிக்கை: எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான அரசு மிக உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது. தேசியப் பாதுகாப்பிற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.. எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். இது நல்ல விஷயம் இல்லை" என்றார்.
காஷ்மீர்: மேலும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு விவகாரம் குறித்துப் பேசிய அவர், "காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது மகத்தான சாதனை. அங்கு இருந்த பதற்றமான சூழலை இதன் மூலம் மோடி ஜியும் அமித் ஷாவும் தலைகீழாக மாறிவிட்டனர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் அவர்கள் அங்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பிறகே ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா மற்றும் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
மேலும், எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானுக்குச் சாதகமாக இருக்கக்கூடாது. அதேநேரம் பாகிஸ்தானுக்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பது இந்தியாவுக்குத் தெரியும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் தக்க பதிலடி தரப்படும்.
ராமர் கோயில்: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களின் நீண்ட கால கோரிக்கை. அதுவும் இப்போது நிறைவேறி இருக்கிறது. இதைச் சாத்தியமாக்கிய பிரதமர் மோடியை நான் பாராட்டுகிறேன். சிவசேனாவின் நிறுவனர் மறைந்த பாலாசாகேப் தாக்கரேவும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டவே விரும்பினார். அதேநேரம் இந்தக் கோவில் திறப்பு விழாவில் கூட காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு இந்துக்கள் மீது அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது" என்றார்.
தொடர்ந்து சிவசேனாவிற்குள் ஏற்பட்ட பிளவு குறித்துப் பேசிய ஷிண்டே, "உத்தவ் தாக்கரே தரப்பில் இருந்து பிரிந்து வர நாங்கள் முடிவெடுத்தது சரியான முடிவுதான்.. பாலாசாகேப்பின் எண்ணங்களைச் சிதைத்து, வீர் சாவர்க்கரின் மதிப்புகளைக் குறைக்க தாக்ரே முயன்றார். நாங்கள் மட்டுமின்றி என்சிபி கட்சியிலும் பாதி இப்போது என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறது. நாங்கள் சரியான முடிவையே எடுத்துள்ளோம் என்பதையே இது காட்டுகிறது.
நோக்கம்: நடக்கும் லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியை மூன்றாவது முறையாகப் பிரதமராக்குவதே நோக்கம்.. இதற்காக நாங்கள் கடுமையாக உழைக்கிறோம், மக்கள் மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்வார்கள். எதிர்க்கட்சிகள் பொய்யான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். நாட்டில் மிக சிறந்த வளர்ச்சியை ஏற்படுத்தவே வரவே நாங்கள் உழைக்கிறோம். பாஜகவையும் பிரதமர் மோடியையும் வலுப்படுத்துவதே மகாராஷ்டிர மக்களின் எண்ணமாக இருக்கிறது.
சமூகத்தில் பின்தங்கிய மராத்தா சமூகத்தை மேம்படுத்த நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முந்தைய காங்கிரஸ்- என்சிபி அரசு செய் தவறியதை நாங்கள் செய்து காட்டியிருக்கிறோம்" என்றார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications