மகாராஷ்டிர அரசியலில் மாபெரும் திருப்பம்.. முதல்வர் பதவியிலிருந்து பட்னாவிஸ் திடீர் ராஜினாமா!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மகாராஷ்டிராவில் முதல்வர் பட்னாவிஸ் திடீர் ராஜினாமா!| Devendra Fadnavis resigns as the Chief Minister

    மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் ராஜினாமா செய்ததை அடுத்து தற்போது தேவேந்திர பட்னாவிஸ் செய்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மெஜாரிட்டிக்கு 42 இடங்கள் குறைவாக இருந்தும் கூட அங்கு பாஜக ஆட்சி அமைத்தது. சனிக்கிழமை அதிகாலை மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தார்.

    இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வசதியாக தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    ஆனால் பாஜகவிற்கு மெஜாரிட்டி எம்எல்ஏக்கள் இல்லை. இதனால் பாஜக கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்குமா என்று கேள்வி எழுந்தது. சிவசேனா கூட்டணியிடம் மொத்தம் 162 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இதனால் தற்போது திடீர் திருப்பமாக மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் பதவி விலகி உள்ளார்.

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    இவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் அளித்துள்ளார். இதையடுத்து தற்போது மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அதில் பட்னாவிஸ் , சிவசேனாவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது பாஜக; மகாராஷ்டிராவை ஆள பாஜகவுக்கு தகுதி உள்ளது. பாஜக - சிவசேனா கூட்டணிக்கே மக்கள் வாக்களித்தனர். தேர்தலின் போது மக்களின் முழு ஆதரவும் எங்களுக்கு இருந்தது.

    சிவசேனா மனம்

    சிவசேனா மனம்

    தேர்தல் வெற்றிக்கு பின் சிவசேனா மனம் மாறிவிட்டது. பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லை. அதனால் சிவசேனா எங்களுக்கு அழுத்தம் கொடுத்தது. சிவசேனா அதன் பின் எங்களிடம் பேரம் பேசியது .
    முதல்வர் பதவியை சிவசேனாவிற்கு அளிப்போம் என்று எந்த வாக்குறுதியும் இல்லை.

    வாக்குறுதி அளிக்கவில்லை

    வாக்குறுதி அளிக்கவில்லை

    சுழற்சி முறையில் முதல்வர் இருப்பார் என்று எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. முதல்வர் பதவிக்காக பாஜகவுடன் பேரம் பேசிக் கொண்டே இதர கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது சிவசேனா. கூட்டணி வைக்க முயலும் மூன்று கட்சிகளும் கொள்கை ரீதியாக வேறு வேறு கட்சிகள் என்று குறிப்பிட்டார்.

    ராஜினாமா செய்தார்

    ராஜினாமா செய்தார்

    இந்த பேட்டியை தொடர்ந்து தனது முதல்வர் பதவியில் இருந்து பட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமலே தேவேந்திர பாட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். அதோடு அம்மாநிலஆளுநர் பகத் சிங்கைசந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சிக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+