மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி.. 61% பேருக்கு இருமுறை மரபணு மாறிய கொரோனா பாதிப்பு.. தீயாக பரவும் பின்னணி

Google Oneindia Tamil News

மும்பை: புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகள் மாதிரிகளை ஆய்வு செய்து ஒரு அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரை மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்ட 361 கொரோனா மாதிரிகளில், 61% மாதிரிகள் இருமுறை மரபணு மாற்றம் கண்ட கொரோனா வைரஸ் என்று கண்டறிந்துள்ளது அந்த ஆய்வகம்.

Maharashtra: double mutant found in 61% samples tested

E484Q மற்றும் L452R என இரு முறை மரபணு மாற்றம் கண்டு தற்போது B.1.617 என்று உருமாறிய மரபணுவைச் சேர்ந்த கொரோனா வைரஸ் ஆகும்.

மகாராஷ்டிராவின் இரண்டாவது அலை ஏற்பட கொரோனா மரபணு மாற்றம் ஒரு காரணமாக இருக்கும் என்ற கருத்தை நிராகரிக்க முடியாது என்று மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலம் ஒவ்வொரு நாளும் 50,000 க்கும் மேற்பட்ட புதிய கேஸ்களை பதிவு செய்து வருகிறது. மேலும் 5.64 லட்சம் ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இது இந்தியாவின் கொரோனா கேஸ்களில் பாதி அளவாகும்.

அதேநேரம், கொரோனா தடுப்பு வியூகத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு மகாராஷ்டிராவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா சுகாதார செயலாளர் டாக்டர் பிரதீப் வியாஸ் கூறியுள்ளார்.

English summary
The National Institute of Virology (NIV), Pune, has shared data with laboratories in Maharashtra showing that of 361 Covid-19 samples taken in Maharashtra from January to March and genome sequenced, 61% or 220 had the double mutation E484Q and L452R, now classified as B.1.617 lineage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X