மலைப்பகுதியில் காதலனுடன் தனிமை.. இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. ஆடையில்லாமல் கதறிய காதலன்
மும்பை: மாகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே விரார் மலையில் தனிமையில் காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த இளம்பெண்ணை இரண்டு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு இளைஞர்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மும்பை அருகே விரார் என்ற மலைப்பகுதியில் ஜிவ்தானி கோவில் அமைந்துள்ளது இந்த கோவில் அருகே மலைப்பகுதியில் மாலை நேரத்தில் இளம் காதல் ஜோடி ஒன்று தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

பணம் கேட்டு மிரட்டல்
அப்போது, அங்கு விரார் கிழக்கு சாய்நாத் பகுதியை சேர்ந்த தீரஜ் சோனி(வயது 25), லட்சுமண் ஷிண்டே(22) மதுகுடிக்க வந்தனர். காதலர்கள் தனிமையில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தனர். அவர்கள் தனிமையில் இருந்த ஜோடியை செல்போனில் படம் எடுத்தார்கள். அத்துடன் அந்த படத்தை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவோம் என மிரட்டி இளைஞரிடம் பணம் பறிக்க முயற்சித்துள்ளார்கள். ஆனால் அந்த இளைஞரிடம் பணம் இல்லை. இதனால் கூகுள் பே மூலம் ரூ.500 அனுப்புமாறு போனில் தொடர்பு கொண்டு நண்பரிடம் கேட்டு உள்ளார்.

மண்டை உடைப்பு
அந்த நேரத்தில் தீரஜ் சோனியும், லட்சுமண் ஷிண்டேவும் இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். இதனால் அந்த இளைஞர், இளம்பெண்ணை காப்பாற்ற அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து தீரஜ் சோனி மண்டையை உடைத்தார்.இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் வாலிபரின் ஆடையை களைந்தனர். அவரை கீழே தள்ளி கைகளை கட்டிப் போட்டுள்ளார்கள்

இளம் பெண் கதறல்
பின்னர் அவர்கள் இளம்பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த கொடூர செயலை தொடர்ந்து இளம்பெண்ணை மலையில் அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடினர். இளம்பெண் தனக்கு நேர்ந்த அவலத்துடன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மனநலம் பாதிப்பு
இந்தநிலையில் இளம்பெண்ணுடன் இருந்த இளைஞர் ஒருவழியாக தனது கைகட்டுகளை அவிழ்த்து மலையில் இருந்து கீழே ஓடி வந்திருக்கிறார். ஆடை இல்லாமல் இருந்த நிலையில் உதவி கேட்டுள்ளார். அவர் ஆடை இல்லாமல் இருந்ததால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொதுமக்கள் நினைத்தனர்.

தலையில் காயம்
இந்தநிலையில் இளைஞர் ஒருவர் ஊருக்குள் ஆடையில்லாமல் சுற்றிய தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரிடம் இளைஞர் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். இதனால் கடத்தப்பட்ட இளம்பெண்ணை போலீசார் தேடினர். இந்தநிலையில் அந்த இளைஞர், இளம்பெண்ணை கடத்தி சென்றவர்களில் ஒருவரை தலையில் தாக்கியதை போலீசாரிடம் கூறயிருக்கிறார் எனவே போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு தலையில் காயத்துடன் யாரும் சிகிச்சை பெற வந்தால் தகவல் கொடுக்குமாறு தெரிவித்தனர்.

குற்றவாளிகள் கைது
இந்தநிலையில் தலையில் காயத்துடன் வாலிபர் ஒருவர் சிகிச்சைக்கு வந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மருத்துவமனைக்கு காயத்துடன் வந்த இளைஞரின் படத்தையும் போலீசாருக்கு அனுப்பப்பட்டது. அப்போது அவர் காதலனை தாக்கி, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தீரஜ் சோனி என்பது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தீரஜ் சோனியை கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் லட்சுமண் ஷிண்டேயையும் கைது செய்தனர். சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

வழக்கு பதிவு
இதனிடையே போலீசார் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அவரது வீட்டில் இருந்து அழைத்து சென்று புகாரை பெற்றார், அந்த இளம்பெண்ணின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டவர்கள் மீது கூட்டு பலாத்காரம், இயற்கைக்கு மாறான உறவு, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் 27 ம் தேதி வரை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். மும்பை அருகே தனிமையில் காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications