மகாராஷ்டிராவில் தொடரும் இழுபறி: பாஜகவின் ஆட்சியில் பங்கேற்காவிட்டால் சிவசேனா உடையுமோ?
Recommended Video
மும்பை: பாஜக தலைமையிலான ஆட்சியில் சமமான அதிகாரப் பகிர்வை சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலை நீடித்தால் சிவசேனாவின் 24 புதிய எம்.எல்.ஏக்கள் கூண்டோடு பாஜகவுக்கு தாவக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜகவும் சிவசேனாவும் 161 தொகுதிகளில் வென்றுள்ளன. பாஜக 105, சிவசேனா 56 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

பாஜக தலைமையில்தான் ஆட்சி அமைக்கப்படும் என்பதில் அக்கட்சி உறுதியாக இருக்கிறது. ஆனால் தேர்தலுக்கு முன்னர் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி சமமான அதிகாரப் பகிர்வை வலியுறுத்துகிறது சிவசேனா. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
இதனால் புதிய அரசு அமைவதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. இந்நிலையில்தான் சிவசேனாவில் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் தி பிரிண்ட் இணையதளத்துக்கு அளித்த தகவலில், மகாராஷ்டிராவில் ஆட்சியில் பங்கேற்காமல் இருப்பது என உத்தவ் தாக்கரே முடிவு செய்தால் சிவசேனாவின் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 24 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளன.
மேலும் தி பிரிண்ட் இணையதளத்துக்கு பேட்டியளித்த சிவசேனா தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மாநில அமைச்சருமானவரும், ஆட்சியில் பங்கேற்க உத்தவ் தாக்கரே விரும்பாவிட்டால் குறைந்தது 24 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைவார்கள்; எதிர்க்கட்சி வரிசையில் அமர நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய நிலையில் சிவசேனாவின் கோரிக்கைகளை பாஜ பரிசீலித்தாலும் பிற கட்சிகள் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. ஆனால் இதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஆகையால் சிவசேனா எம்.எல்.ஏகள் கட்சி தாவுவதின் மூலமும் சுயேட்சைகள் ஆதரவுடனும் பாஜக ஆட்சி அமைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications