Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலை 8.45 மணி.. தினமும் ஒன்றாக தேசியக்கீதம் பாடும் கிராம மக்கள்..தேசப்பற்றை நிரூபிக்க காரணம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டு பதற்றமான சூழலில் வாழ்ந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், தேசப்பற்றை வளர்க்கவும் தினமும் தேசியக்கீதம் பாடி தங்கள் அன்றாட பணிகளை தொடங்கி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் முல்சேரா கிராமம் உள்ளது. இந்த கிராமம் மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 2,500 மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்களும், மேற்கு வங்கத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களும் தான் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கியால் சூடு நடந்த முதல் கிராமம்

துப்பாக்கியால் சூடு நடந்த முதல் கிராமம்

அதாவது ஒருகாலத்தில் மாவோயிஸ்ட்டுகளால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்த 1992ம் ஆண்டில் மாவோயிஸ்ட் கமாண்டராக அடையாளம் காணப்பட்ட சந்தோஷ் அண்ணா மற்றும் அவருடன் இருந்த குழந்தை இந்த கிராமத்தில் தான் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். மேலும் சமீபத்தில் ஒரு பெண் உள்பட 2 பேர் போலீசில் சரணடைந்தனர்.

தேசியக்கீதம் பாடும் வழக்கம்

தேசியக்கீதம் பாடும் வழக்கம்

இந்நிலையில் தொடர்ந்து மாவோயிஸ்ட் அச்சம் கிராமத்தில் உள்ளது. இதற்கிடையே தான் கிராம மக்கள் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் தினமும் காலையில் தேசியக்கீதம் பாட முடிவு செய்துள்ளளனர். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இதனை கிராம மக்கள் கடைப்பிடிக்க துவங்கி உள்ளனர்.

காலை 8.45 மணி

காலை 8.45 மணி

அதன்படி தினமும் காலை 8.45 மணிக்கு கிராமத்தில் அனைவரும் சேர்ந்து தேசியக்கீதம் பாடி ஒற்றுமையை பறைசாற்றி வருகின்றனர். இந்த வேளையில் அனைத்து மக்களும் எழுந்து நின்று தேசியக்கீதத்துக்கு மரியாதை செலுத்துகின்றனர். மேலும் அரசு பஸ், பிற வாகனங்களில் செல்பவர்களும் கீழே இறங்கி தேசக்கீதத்துக்கு மரியாதை கொடுக்கின்றனர்.

நாட்டில் 3வது கிராமம்

நாட்டில் 3வது கிராமம்

கிராமத்தில் தினமும் தேசியக்கீதம் பாடுவது இது முதல் முறையல்ல. தெலுங்கானாவின் நெல்கொண்டா, மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள பில்வாடி கிராமத்தில் இந்த நடைமுறை உள்ளது. அடுத்தபடியாக நாட்டிலேயே மூன்றாவது கிராமமாக முல்சேரா கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசியக்கீதம் பாடி வருகின்றனர். முல்சேரா கிராமத்தை பார்த்து தற்போது அருகே உள்ள விவேகானந்தபூரிலும் காலையில் தேசியக்கீதம் பாடும் வழக்கம் அறிமுகமாகி உள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் தேசியக்கீதம் பாட அனைவரும் தயாராகும்படி 2 போலீஸ்காரர்கள் வாகனங்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் ‛அலர்ட்' செய்து வருகின்றனர்.

நல்ல முயற்சி

நல்ல முயற்சி

இதுதொடர்பாக கட்சிரோலி மாவட்ட எஸ்பி அங்கித் கோயல் கூறுகையில், ‛‛இது ஒரு நல்ல முயற்சி. கிராம மக்கள் தினமும் காலையில் ஒன்று சேர்ந்து தேசியக்கீதம் பாடி நாளை துவங்குகின்றனர். இது அவர்களுக்கு இடையேயான ஒற்றுமையையும், தேசப்பக்தியையும் அதிகரிக்கப்படும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+