மகாராஷ்டிராவில் அடங்காத பரபரப்பு- வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தும் கிராமத்தில் சரத்பவார்!
மும்பை: மகாராஷ்டிராவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லாததால் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த ஒரு கிராமமே முடிவு செய்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் ஓயவில்லை. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மார்காவாடி கிராம மக்களின் இந்த முடிவு அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மார்காவாடி கிராம மக்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேரில் சந்தித்து பேசியிருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. தேர்தல் கருத்து கணிப்புகளை மீறி பிரம்மாண்ட வெற்றியை பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதனை காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளால் இப்போதுவரை ஜீரணிக்க முடியவில்லை.

மகாராஷ்டிரா தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்துதான் பாஜக இத்தகைய வெற்றியைப் பெற்றது என்பது காங்கிரஸ் உள்ளிட்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் இந்தப் புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என சோலாப்பூர் மாவட்டத்தின் மார்க்காவாடி கிராம மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் நிற்காமல், வாக்குச் சீட்டு முறையில் மாதிரி தேர்தல் நடத்தவும் இந்த கிராம மக்கள் முடிவு செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அரசு அதிகாரிகளோ இந்த தேர்தலை நடத்த விடாமல் தடுத்தனர். அத்துடன் அந்த கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த பின்னணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்காவடி கிராமத்துக்கு நேற்று நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார். இது புதிய பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. சரத்பவாரின் இந்த சந்திப்பை பாஜக மிகக் கடுமையாக விமர்சித்தும் வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications