மகாராஷ்டிராவில் தொடர்ந்து பயங்கரமாக தாக்கி வரும் கொரோனா- 24 மணிநேரத்தில் 3,752 பேருக்கு பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தாக்கம் நாளுக்குநாள் உக்கிரமாகி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3, 752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. ஒரேநாளில் 3,752 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் 100 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

1,20,504 பேருக்கு பாதிப்பு
இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 1,20,504 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,751 ஆகவும் அதிகரித்திருக்கிறது. இதுவரை மொத்தம் 60,838 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தாராவியில் குறைவு
தமிழர்கள் அதிகம் வாழும் மும்பையின் தாராவி பகுதியில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. இன்று 28 பேருக்கு கொரோனா உறுதியானது. தாராவியில் மட்டும் மொத்தம் 2134 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கு 78 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர்.

கர்நாடகாவில் 210 பேர்
கர்நாடகாவில் இன்று 210 பேருக்கு கொரோனா உறுதியானது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,944 ஆக உயர்ந்திருக்கிறது. கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 114 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

கேரளாவில் மேலும் 97 பேருக்கு பாதிப்பு
கேரளாவில் இன்று மேலும் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரளாவில் கொரோனாவுக்கு இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் கேரளாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருக்கிறது. கேரளாவில் மொத்தம் 2,794 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications