மகாராஷ்டிராவில் மிக கோரத்தாண்டவம் - ஒரே நாளில் 8 ,641 பேருக்கு கொரோனா
மும்பை: மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 8,641 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. மகாராஷ்டிராவில் வியாழக்கிழமையன்று ஒரே நாளில் 8.641 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 2,84,281 ஆக உயர்ந்துள்ளது. இதில் மும்பையில் மட்டும் 97,751 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இருப்பினும் மகாராஷ்டிராவில் 2 மாதங்களில் முதல் முறையாக கொரோனா இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் வியாழக்கிழமையன்று 266 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 11,194 ஆக உள்ளது.
கடந்த வாரங்களில் மகாராஷ்டிராவில் இறப்பு விகிதம் 4.47% ஆக இருந்தது. இது தற்போது 4. 22 சதவீதமாக குறைந்துள்ளது. மும்பையில் இறப்பு விகிதமானது 5.6% ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications