அழகான பிங்க் கலர் "மோடி".. செம டிமாண்ட்.. கோடி ரூபாய் கேட்டு மிரள வைத்த பாபுராவ்!
மோடி என்ற ஆடு மகாராஷ்டிரா கால்நடை சந்தையில் விற்பனைக்கு வந்தது
மும்பை: பாபுராவ் பிங்க் கலர் துணியால் மூடி ஒரு ஆட்டுக்குட்டியை கொண்டு வந்தார்.. அந்த ஆட்டுக்குட்டி பெயர் மோடியாம்.. அந்த மோடியை ஏலத்தில் வாங்க ஏகப்பட்ட போட்டி நடந்துள்ளது!
வடமாநிலங்களில் கால்நடை சந்தை என்றாலே ரொம்பவும் ஃபேமஸ்.. இதுபோன்ற சந்தையில் கால்நடைகள் அடிக்கடி ஏலத்தில் நடப்பது வழக்கம்.
ஆனால், சமீப காலமாக கொரோனா பாதிப்பு இருக்கவும், சந்தைகள் மூடப்பட்டன.. அதனால் ஏலமும் அவ்வளவாக நடக்கவில்லை.. தொழில்களும் முடங்கின.

கடந்த சில மாதங்களாகவே ஊரடங்கில் தொடர்ச்சியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.. அதனால் முன்புபோல, ஓரளவு இயல்பு நிலை திரும்பி கொண்டிருக்கிறது. அதேசமயம், கால்நடை சந்தையில் விலை அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதில் மிக முக்கியமான சந்தை மேற்கு மகாராஷ்டிரா பகுதியில் உள்ள அட்பாடி என்ற சந்தையாகும்.. கால்நடை விற்பனை என்றாலே இந்த சந்தையில்தான் வருடா வருடம் நடக்கும்.
அந்த வகையில், நேற்று ஏராளமான கால்நடை வளர்ப்பவர்கள், அவர்களுடைய கால்நடைகளை இந்த சந்தையில் விற்பதற்காக ஒன்றுகூடினர்.. அப்போது, சங்கோலா தாலுகாவை சேர்ந்த பாபுராவ் மெட்காரி என்பவர் அங்கு வந்தார்.. அவர் கையில் ஒரு ஆடு இருந்தது.. அதற்கு ஒரு ரோஸ் கலர் துணியை போர்த்தி கொண்டு வந்திருந்தார்..
ஏலத்தில் விற்க வந்ததால், அந்த ஆடு பெயர் என்ன என்று கேட்டனர்.. அதற்கு அவர் மோடி என்று சொன்னார்.. மேலும் அந்த ஆட்டை 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விடப்போவதாக சொன்னார்.
ஆனால், அங்கு கூடியிருந்தவர்களோ 70 லட்ச ரூபாய் தந்தால் ஏலத்தில் எடுத்து கொள்வதாக சொன்னார்கள்.. ஆனால், பாபு பிடிவாதமாக இருந்தார்.. 70 லட்சத்துக்கு மோடி ஆட்டை விற்க முன்வரவில்லை. ஒன்றரை கோடி தந்தால் தருவேன்.. இல்லாவிட்டால் மோடியை தர முடியாது என்று கறாராக சொல்லிவிட்டார். இதனால் கடைசிவரை அந்த ஆடு விற்பனை ஆகவில்லை.. அதாவது மோடியை யாரும் வாங்கவில்லை!
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications