5 வருடம் எல்லாம் வாய்ப்பே இல்லை.. பாதிதான்.. சிவசேனாவிற்கு என்சிபி கண்டிசன்.. சிக்கல் மேல் சிக்கல்
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைத்தாலும் கூட சிவசேனா கட்சி ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியை பெறாது என்று தேசியவாத காங்கிரஸ் தரப்பு கூறுகிறது.
மும்பை: தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைத்தாலும் கூட சிவசேனா ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியை பெறாது என்று தேசியவாத காங்கிரஸ் தரப்பு கூறுகிறது
மகாராஷ்டிரா அரசியலில் பிரச்சனை இப்போதைக்கு முடியுமா என்று தெரியவில்லை. அங்கு ஆட்சி அமைக்க இருந்த வாய்ப்பை பாஜக, சிவசேனா இரண்டு கட்சிகளும் நழுவவிட்டுவிட்டது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவிற்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. ஆனால் அங்கு சிவசேனா, பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் நேற்று எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் சிவசேனா 5 வருடம் முதல்வர் பதவியை கேட்டு ஆலோசனை செய்து வருகிறது.

கூட்டணி வைப்போம்
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைத்தாலும் கூட சிவசேனா ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியை பெறாது என்று தேசியவாத காங்கிரஸ் தரப்பு கூறுகிறது. எங்கள் கூட்டணியிலும் அவர்களுக்கு பாதி வருடம்தான் முதல்வர் பதவி கிடைக்கும். நாங்களும் அதிக இடங்களை பெற்று இருக்கிறோம்.

எத்தனை வருடம்
அதனால் எங்களால் விட்டு கொடுக்க முடியாது. இரண்டரை வருடங்கள் எங்கள் கட்சியும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். அவர்கள் பாஜகவுடன் சண்டை போட்டதே இரண்டரை வருடம் முதல்வர் பதவி வேண்டும் என்றுதான். அதனால் நாங்களும் இரண்டரை வருடம் மட்டுமே விட்டுக்கொடுப்போம், என்று என்சிபி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேட்டி அளித்தார்
இதையடுத்து சிவசேனா மூத்த தலைவர் எம்பி சஞ்சய் ராவத் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில், சிவசேனா தலைமையிலான ஆட்சி விரைவில் மகாராஷ்டிராவில் அமைய போகிறது. நாங்கள் நிலையான ஆட்சியை தருவோம். இரண்டு நாட்கள் மட்டும் பொறுத்திருங்கள்.

காலம் தாழ்த்த வேண்டாம்
அதேசமயம் இரண்டு நாட்களுக்கு பிறகும் நாங்கள் காலம் தாழ்த்த மாட்டோம். எல்லா பேச்சுவார்த்தையும் விரைவில் முடிய வேண்டும். இதற்கு மேலும் நாங்கள் பொறுமையாக இருக்க மாட்டோம். நல்ல முடிவிற்காக காத்து இருக்கிறோம் என்று சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications