மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவுடன் அஜித் பவார் கூட்டணி வைத்தது சரத் பவாருக்கு முன்பே தெரியுமா? சஞ்சய் ராவத் பரபர பதில்!

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் அஜித் பவார் கூட்டணி வைத்தது தேசியவாத தலைவர் சரத் பவாருக்கு முன்கூட்டியே தெரியாது என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவுடன் அஜித் பவார் கூட்டணி வைத்தது தேசியவாத தலைவர் சரத் பவாருக்கு முன்கூட்டியே தெரியாது என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் அஜித் பவார் தற்போது துணை முதல்வராகி உள்ளார். அதேபோல் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகி இருக்கிறார்.

நேற்று அதிகாலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் திடீரென்று பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து நேற்று இவர் ஆட்சி அமைத்தார்.

என்ன பேட்டி

என்ன பேட்டி

இந்த நிலையில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் பேட்டியில், ஆளுநர் அஜித் பவாரின் பொய்யான கடிதத்தை நம்ப கூடாது. அவர் நாங்கள் வைத்திருந்த கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளார். இது முறைகேடு. எம்எல்ஏக்கள் ஆதரவு எங்களுக்குத்தான் இருக்கிறது. நாங்கள் ஆளுநர் முன் அணிவகுப்பு நடத்துவோம்.

பலம்

பலம்

49-50 எம்எல்ஏக்கள் எங்களிடம் இருக்கிறார்கள். இன்னும் 1-2 எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வந்துவிடுவார்கள். அதனால் பாஜகவால் கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிக்கவே முடியாது. அவர்கள் மொத்தமாக வீழும் நேரம் நெருங்கிவிட்டது.

மிரட்ட பார்க்கிறது

மிரட்ட பார்க்கிறது

பாஜக எங்களை மிரட்ட பார்க்கிறது. அஜித் பவாரை அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி உள்ளது. ஆனால் எங்களை அப்படி செய்ய முடியாது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்.

மக்களை ஏமாற்றிவிட்டார்

மக்களை ஏமாற்றிவிட்டார்

அஜித் பவார் மக்களை ஏமாற்றவிட்டார். கட்சியை ஏமாற்றிவிட்டார். தன் குடும்பத்தினரை ஏமாற்றிவிட்டார். அவரை யாரும் மன்னிக்க மாட்டார்கள். அவரை நம்பி போனவர்களுக்கு இதே கதிதான் ஏற்படும்.

செயல்பாடு

செயல்பாடு

அஜித் பவாரின் செயல்பாடு ஏற்கனவே சரத் பவாருக்கு தெரியும் என்று கூறுகிறார்கள். சரத் பவாருக்கு தெரிந்துதான் அஜித் பாஜகவுடன் சேர்ந்தார் என்று கூறுகிறார்கள். அதெல்லாம் சுத்த பொய். யாரும் நம்பாதீர்கள்.

எல்லாம் பொய்

எல்லாம் பொய்

சரத் பவார் குறித்து பாஜக பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. பாஜகவின் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சரத் பவாருக்கும் சிவசேனவிற்கும் நல்ல நட்பு இருக்கிறது. பாஜக மீது சரத் பவார் கடும் கோபத்தில் இருக்கிறார்.

English summary
Maharashtra: Sharad Pawar wasn't aware of Ajit Pawar's move to support BJP says Sanjay Raut.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X