அமித் ஷாவின் முயற்சிக்கு பலன் இல்லை.. முரண்டு பிடிக்கும் உத்தவ் தாக்கரே.. சிவசேனா புது பாய்ச்சல்!

மஹாராஷ்டிராவில் மக்களின் ஆதரவை திரட்டவும் பொருட்டு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை மறுநாள் பயணம் மேற்கோள்ள இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மஹாராஷ்டிராவில் மக்களின் ஆதரவை திரட்டவும் பொருட்டு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை மறுநாள் பயணம் மேற்கோள்ள இருக்கிறார்.

மஹாராஷ்டிராவில் இன்னும் ஆட்சி அமைக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது. சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.

அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.

கோரிக்கை

கோரிக்கை

சிவசேனா தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று உறுதியாக இருப்பதால். 50/50 வேண்டும் கண்டிப்பாக கேட்டு வருவதால் அங்கு பாஜக ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு கண்டிப்பாக இரண்டரை வருடம் ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று சிவசேனா கண்டிப்பாக கூறிவிட்டது.

பாஜக தோல்வி

பாஜக தோல்வி

இது தொடர்பாக பாஜக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. அமித் ஷா போன் மூலம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. தங்கள் கோரிக்கையில் இருந்து ஒரு புள்ளி கூட கீழே இறங்கி வர மாட்டோம் என்று சிவசேனா உறுதியாக உள்ளது.

சிவசேனா ஆதரவு

சிவசேனா ஆதரவு

இந்த நிலையில் தற்போது விவசாய பேரணி ஒன்றை சிவசேனா கட்சி நடத்த இருக்கிறது. மஹாராஷ்டிராவில் விவசாயிகள் அதிகம் இருக்கும் அவுரங்காபாத் மற்றும் விதர்பா பகுதிகளில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நாளை மறுநாளில் இருந்து இந்த பயணம் தொடங்க உள்ளது.

விவசாய பேரணி

விவசாய பேரணி

மஹாராஷ்டிராவில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் பேரணி நடக்க உள்ளது. உத்தவ் தாக்கரேவின் இந்த பேரணியில் பெரிய அளவில் கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரத யாத்திரை திட்டம்

ரத யாத்திரை திட்டம்

ஆனால் இதற்கு பின் சிவசேனா வேறு ஒரு திட்டம் வைத்து இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அதன்படி இந்த விவசாய பயணம் மூலம் மக்களின் ஆதரவை பெற சிவசேனா திட்டம் போட்டுள்ளது. பாஜகவிற்கு அழுத்தம் தரும் பொருட்டு உத்தவ் தாக்கரே இந்த பயணத்தை மேற்கொள்கிறார். ரத யாத்திரை போலவே இந்த பயணம் இருக்கும் என்கிறார்கள்.

முதல்வர் பதவி முடிவு

முதல்வர் பதவி முடிவு

முதல்வர் பதவி கண்டிப்பாக வேண்டும். மக்கள் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க சிவசேனா முடிவு செய்துள்ளது. இதற்காக இந்த பயணத்தை உத்தவ் தாக்கரே மேற்கொள்கிறார். பாஜக இதை எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற பெரிய குழப்பம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+