தந்தையை மறவாத தனயன்! பால்தாக்கரேவின் ஆசையை நிறைவேற்றிய உத்தவ் தாக்கரே! முதல்வராக எடுத்த கடைசி முடிவு
மும்பை: மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தால் முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக அவர் தனது தந்தை பால்தாக்கரேவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அவுரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய 2 நகரங்களின் பெயரை மாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார்.
மகராஷ்டிராவில் பெரும் அரசியல் குழப்பம் நிலவியது. இந்த குழப்பத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணியில் அதிருப்தி அடைந்த சிவசேனா எம்எல்ஏக்கள் 35க்கும் அதிகமானவர்கள் அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு சென்றது தான் காரணம்.
இவர்களை திரும்ப அழைக்க முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இது எதுவும் பலன் அளிக்கவில்லை.

ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே
இதற்கிடையே தான் மகாராஷ்டிரா ஆளுநர் நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது. சட்டசபையில் போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இரவில் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

கடைசி அமைச்சரவை கூட்டம்
இதன்மூலம் மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் இரண்டரை ஆண்டு கூட்டணி ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பபட்டுள்ளது. முன்னதாக உத்தவ் தாக்கரே தனது ராஜினாமா அறிவிப்புக்கு முன்பு அமைச்சரவை கூட்டம் நடத்தினார். தனது தலைமையில் நடைபெறும் கடைசி அமைச்சரவை கூட்டம் என்பதை அறிந்திருந்த உத்தவ் தாக்கரே இந்த கூட்டத்தின் வாயிலாக 2 நகரங்களின் பெயர் மற்றும் மும்பை விமான நிலையத்தின் பெயர்கள் மாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார்.

2 நகரங்களின் பெயர் மாற்றம்
அதன்படி அவுரங்காபாத் நகரம் சம்பாஜிநகர் எனவும், உஸ்மானாபாத் நகரம் தாராஷிவ் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதோடு நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு முன்னாள் விவசாயிகள் சங்க கட்சி தலைவர் டிபி பாட்டீல் பெயர் சூட்ட கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதில் முகலாய பேரரசர் அவுரங்கசீப் பெயரை குறிக்கும் வகையில் அவுரங்காபாத் நகரமும், ஐதராபாத்தின் கடைசி ஆட்சியாளரான மீர் உஸ்மான் அலி கான் பெயரில் உஸ்மானாபாத் நகரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த 2 நகரின் பெயரையும் மாற்ற அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

தந்தையின் ஆசை நிறைவேற்றம்
இந்த பெயர் மாற்றம் குறித்தும் தனது ராஜினாமா அறிவிப்புக்கான பேச்சில் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டு இருந்தார். இதுபற்றி அவர், ‛‛அவுரங்காபாத் நகரை சம்பாஜி நகர், உஸ்மானாபாத் நகரை தாராஷிவ் எனவும் பெயர் மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த 2 நகரங்களுக்கு இத்தகைய பெயரை வைக்க என் தந்தை ஆசைப்பட்டார்'' என கூறினார். இதன்மூலம் உத்தவ் தாக்கரே தனது தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டு முதல்வர் பதவியை ராஜினமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications