மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டாம்.. நாங்கள் முடிவை அறிவிப்போம்.. மகாராஷ்டிரா காங். அதிரடி!

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க கூடாது, அங்கு நிலையான ஆட்சி அமையும் வகையில் காங்கிரஸ் முடிவு எடுக்கும் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க கூடாது, அங்கு நிலையான ஆட்சி அமையும் வகையில் காங்கிரஸ் முடிவு எடுக்கும் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் பேட்டி அளித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக கூறியுள்ளது. சிவசேனா தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருவதால் பாஜக இந்த அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது.

இன்று மாலை மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங்கை அம்மாநில காபந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டாக சந்தித்தார்கள். எங்களால் ஆட்சி அமைக்க முடியாது என்று இவர்கள் சந்திப்பில் கூறினர்.

அமைதி, ஒற்றுமை முக்கியம்.. இந்து, இஸ்லாமிய தலைவர்களுடன் அஜித் தோவல் சந்திப்பு.. முக்கிய ஆலோசனை!அமைதி, ஒற்றுமை முக்கியம்.. இந்து, இஸ்லாமிய தலைவர்களுடன் அஜித் தோவல் சந்திப்பு.. முக்கிய ஆலோசனை!

என்ன பேட்டி

என்ன பேட்டி

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரியும். அவர்களுக்கு சிவசேனா ஆதரவு கிடையாது. காங்கிரஸ் கட்சி அனைத்தையும் கவனமாக பார்த்துக் கொண்டு இருக்கிறது.

இன்னும் முடிவு

இன்னும் முடிவு

நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஆட்சி அமைக்க உரிமை கோருவதா என்று முடிவு செய்யவில்லை. இதுகுறித்து கூட்டம் நடத்தி முடிவு செய்வோம். எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

யாருடைய ஆட்சி

யாருடைய ஆட்சி

மகாராஷ்டிராவில் உடனே குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வர கூடாது. நாங்கள் எங்கள் முடிவை விரைவில் எடுக்க உள்ளோம். காங்கிரஸ் மேலிடத்தில் கேட்டு, நிலையான அரசு அமையும் வகையில் ஒரு முடிவை எடுப்போம், என்று அசோக் சவான் குறிப்பிட்டு இருக்கிறார்.

கூட்டணி வைக்குமா?

கூட்டணி வைக்குமா?

இதனால் தற்போது காங்கிரஸ் சிவசேனா உடன் கூட்டணி வைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. சிவசேனாவுடன் ஏற்கனவே காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. நாளை மீண்டும் இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
Maharashtra: We don't want president rule in the state says Congress leader Ashok Chavan in the press meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X