மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.. எங்கே தவறு நடந்தது? மகாராஷ்டிரா பாஜக மீது கோபத்தில் அமித் ஷா!

Google Oneindia Tamil News

Recommended Video

    தீர்வு இன்னும் கிடைக்கவில்லை... சிவசேனா மீது கோபத்தில் இருக்கும் பாஜக

    மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா இடையிலான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாஜக தேசிய தலைவர்களை இந்த பிரச்சனை கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

    ஹரியானாவில் ஆட்சியை பிடித்துவிட்டாலும், மகாராஷ்டிராவில் கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாத நிலையில் இருக்கிறது பாஜக கட்சி. அங்கு சிவசேனாவுடன் இணைந்து மாபெரும் வெற்றியை பாஜக பெற்றுள்ளது. ஆனாலும் சிவசேனாவின் கண்டிப்பான குணத்தால் பாஜக அங்கு ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது.

    அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.

    மகாராஷ்டிராவில் திருப்பம்.. எம்எல்ஏக்களை காப்பாற்ற 5 நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து செல்கிறது சிவசேனாமகாராஷ்டிராவில் திருப்பம்.. எம்எல்ஏக்களை காப்பாற்ற 5 நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து செல்கிறது சிவசேனா

    சிவசேனா

    சிவசேனா

    மகாராஷ்டிராவில் சிவசேனாவை ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டு உள்ளது. கொள்கை ரீதியாக இரண்டும் இந்துத்துவா கட்சிகள்தான். அதேபோல் பாஜக மாநில கட்சிகள் எல்லாவற்றையும் பகைத்துக் கொண்டுள்ளது. நிதிஷ் குமார் மற்றும் அதிமுக தலைவர்களுக்கு அடுத்து சிவசேனா மட்டும்தான் பாஜகவிற்கு நண்பன்.

    நண்பன்

    நண்பன்

    இதனால் சிவசேனாவை வெளிப்படையாக பாஜக விரோதம் கொள்ள முடிவதில்லை. அதேபோல் சட்ட ரீதியாகவும் சிவசேனாவில் யாரும் சிக்கலில் இல்லை. அக்கட்சியில் தலைவர்களுக்கு எதிராக பெரிய வழக்கு எதுவும் இல்லை. இதனால் அவர்களை கைது செய்து, லாக் செய்யும் வாய்ப்பும் பாஜகவிற்கு இல்லை.

    வாய்ப்பு இல்லை

    வாய்ப்பு இல்லை

    அதேபோல் அந்த மாநிலத்தில் சிவசேனாவிற்கு இந்து மக்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. ஆகவே சிவசேனாவிடம் பாஜக நன்றாக மாட்டி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். அந்த கட்சியை பகைக்க முடியாது., சிவசேனாவை ஒன்றும் செய்ய முடியாது என்று பாஜக தேசிய தலைவர்களே கூறி இருக்கிறார்களாம்.

    சமாதானம் செய்ய முடிவு

    சமாதானம் செய்ய முடிவு

    முடிந்தவரை சிவசேனாவை சமாதானம் செய்யவே மகாராஷ்டிரா பாஜக முயன்றது. ஆனால் அக்கட்சியின் முயற்சி எல்லாம் தோல்வியில் முடிந்துவிட்டது. பாஜக - சிவசேனா உருவை எங்க தவறு நடந்தது என்று பாஜக கடும் குழப்பத்தில் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு எல்லாம் சரியாகத்தான் இருந்தது.

    ஏன் பிடிவாதம்

    ஏன் பிடிவாதம்

    ஆனால் இப்போது என்ன ஆனது. ஏன் சிவசேனா பிடிவாதமாக இருக்கிறது என்று பாஜக தலைவர்களுக்கே தெரியவில்லை. அதிலும் சிவசேனா கட்சியில் சஞ்சய் ராவத் பேசுவது பாஜகவை அதிகம் சீண்டி இருக்கிறது. அவர் தொடர்ந்து பாஜக தலைவர்களுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் வைப்பது அமித் ஷா வரை எல்லோரையும் கோபம் கொள்ள செய்துள்ளது.

    ரிசார்ட்

    இந்த பிரச்சனை காரணமாக இப்போதே சிவசேனா தங்கள் எம்எல்ஏக்களை ரிசார்ட் நோக்கி அழைத்து செல்லும் பணியில் இறங்கிவிட்டது. இதை சிவசேனா மறுத்தாலும், எம்எல்ஏக்கள் எல்லோரும் மும்பை ரங்கசந்திரா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருப்பதும் அம்பலம் ஆகியுள்ளது.

    பேரம்

    பேரம்

    இந்த சண்டை முடிய இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று கூறுகிறார்கள். இரண்டு கட்சியில் ஒரு கட்சி தியாகம் செய்யாமல், இந்த பிரச்சனை முடியாது. யார் தியாகம் செய்ய போவது, அமித் ஷா எப்படி காய் நகர்த்த போகிறார், குதிரை பேரங்கள் நடக்குமா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும், என்கிறார்கள்.

    English summary
    Maharashtra: What went wrong in the alliance between BJP and Shiv Sena? - Here are the details.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X