பறக்கும் ரயிலில் முத்தம்.. பதைபதைத்து போன பிரபல நடிகை! அதுக்கு ‘அவனே’ பரவாயில்ல.. கொந்தளித்தது இவரா?
மும்பை: சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல நடிகையான மாளவிகா மோகனன் இளம் வயதில் தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து பகிர்ந்திருந்தார். கல்லூரி காலத்தில் பறக்கும் ரயிலில் பயணித்த போது ஒருவர் தன்னிடம் முத்தம் கேட்டதாக அவர் கூறியிருந்த நிலையில் ரசிகர்கள் விதவிதமாக கமெண்ட் செய்தனர். இந்நிலையில் உங்களுக்கு அவன் பரவாயில்லை என பதிலடி கொடுத்துள்ளார் மாளவிகா.
தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். பட்டம் போல் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், தமிழில் ரஜினியுடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர், விக்ரமுடன் தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது சர்தார் 2 படத்தில் நடித்து வரும் அவர் தமிழ் தெலுங்கு கன்னடம் பாலிவுட் என கலக்கி வருகிறார். மும்பையை பூர்வீகமாக கொண்ட அவர் தைரியமாக பேசுவதும் அதனால் சில சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கம்.

அப்படி ஒரு சம்பவம் தான் கடந்த வாரம் நடைபெற்றது. மும்பை நகரம் பெண்களுக்கு பாதுகாப்பானது என பேசப்படும் நிலையில் உண்மையில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பெண்களுக்கு அது எவ்வளவு சவாலானது என்பதை அவர் விளக்கி இருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர்,"மும்பை பாதுகாப்பான நகரம் என்று சொல்வது ஓர் மூட நம்பிக்கை தற்போது எனக்கு சொந்தமாக கார் மற்றும் டிரைவர் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கிறேன். ஆனால், கல்லூரி காலத்தில் பஸ்ஸிலும் ரயிலிலும் பயணிக்கும்போது, அச்சம் எப்போதும் இருந்தது. பாதுகாப்பு என்பது சில சமயம் அதிர்ஷ்டத்தின் பேரில் தான் அமையும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒருமுறை என் இரண்டு தோழிகளுடன் மும்பை லோக்கல் ரயிலில் பயணித்தேன். இரவு 9.30 மணி இருக்கும். நாங்கள் ஃபர்ஸ்ட் கிளாஸில் அமர்ந்து இருந்தோம். ஒரு ரயில் வெறிச்சோடி இருந்த நிலையில், நாங்கள் ஜன்னலருகே அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு நபர் ஜன்னல் வழியே வெளியே பார்ப்பதுபோல் நெருக்கமாக வந்து, ஒரு முத்தம் கொடுக்கிறாயா? என்று கேட்டார். அந்த நேரத்தில் நாங்கள் மூவரும் அச்சத்தில் உறைந்துவிட்டோம். அந்த வயதில் ஒரு பெண் எப்படி பதிலளிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் திகைத்துப் போனேன். ஒருவேளை அவர் ரயிலுக்குள் வந்து விட்டால் என்ன செய்வது? என பயமாக இருந்தது. இதைப் போன்று பொதுவாக பயணிக்கும் அனைத்து பெண்களும் ஏராளமான இழிவான சம்பவங்களைச் சந்திக்கிறார்கள். எந்த இடமும் முழுமையாக பாதுகாப்பானதாக இல்லை" என கூறியிருந்தார்.
மாளவிகா இந்த கருத்தைச் சொல்லி ஒரு வாரம் ஆகிவிட்டது. அதற்கு தற்போது வரை விமர்சனத்தை சந்தித்து வருகிறார். குறிப்பாக மாளவிகாவின் உடை குறித்து நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வந்த நிலையில் அவரது கடந்த வார பேச்சை வைத்து சில ரசிகர்கள் ஏடாகூடமாக கமெண்ட் செய்தார்களாம். மேலும் இப்போதே இவ்வளவு ஒல்லியாக இருக்கிறீர்கள் அப்போது எப்படி இருந்திருப்பீர்கள் எனவும் கிண்டல் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் கோபமான மாளவிகா என்னிடம் அத்துமீறியவன் உங்களைவிட எவ்வளவோ மேல் இப்படியா பேசுவீர்கள் என பொரிந்து தள்ளி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications