மகாராஷ்டிராவில் அதிர்ச்சி: தடுப்பூசி 2-வது டோஸை பெற்ற சுகாதார பணியாளர் உயிரிழப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி 2-வது டோஸை பெற்ற சுகாதார பணியாளர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுகாதார பணியாளர் சுக்தேவ் கிர்தாத்,2-வது டோஸ் எடுத்துக் கொண்ட 15 நிமிடங்களில் மயக்கம் அடைந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சுக்தேவ் கிர்தாத் ஒரு மாதத்திற்கு முன்பு முதல் டோஸை எடுத்துக் கொண்டார். அப்போது அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் ஓரளவு கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஐஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி 2-வது டோஸை பெற்ற சுகாதார பணியாளர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண் நிபுணருக்கு ஓட்டுநராக பணிபுரியும் பிவாண்டியைச் சேர்ந்த சுக்தேவ் கிர்தாத்,2-வது டோஸ் எடுத்துக் கொண்ட 15 நிமிடங்களில் கண்காணிப்பு அறையில் மயக்கம் அடைந்தார்.

தடுப்பூசி போட்டவர் சாவு
உடனடியாக அவரை சிகிச்சைக்காக இந்திரா காந்தி நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரித்தனர். சுக்தேவ் கிர்தாத் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு தெளிவான காரணம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டாக்டர்கள் விளக்கம்
உயிரிழந்த சுக்தேவ் கிர்தாத் ஒரு மாதத்திற்கு முன்பு முதல் டோஸை எடுத்துக் கொண்டார். அப்போது அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது 2-வது டோஸுக்கு முன்பு அவருக்கு முழு பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு பல ஆண்டுகளாக இரத்த அழுத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடி வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தன என்றும் டாக்டர்கள் கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications