பற்றி எரியும் மகாராஷ்டிரா! தீவிரமானது மராத்தா இடஒதுக்கீடு- ஷிண்டே ஆதரவு எம்.பிக்கள் திடீர் ராஜினாமா!
மும்பை: மராத்தா ஜாதியினரின் இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் 2 எம்.பி.க்கள் பதவிகளை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மண்ணின் மக்களான மராத்தா ஜாதியினர் நீண்டகாலமாக இடஒதுக்கீடு போராடி வருகின்றனர். 2018-ம் ஆண்டில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தீவிரமாக நடந்தது. அப்போது இடஒதுக்கீடு கோரி 10க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்தனர். இதனால் அப்போது மராத்தா சமூகத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீடு வழங்குவதாக மாநில அரசு அறிவித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இதற்கு தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வெடித்திருக்கிறது. மராத்தா சமூக செயற்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே, ஆகஸ்ட் மாதம் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தை போலீசார் ஒடுக்கியது பெரும் சர்ச்சையானது. அப்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜ் ஜராங்கேவை சந்தித்து மராத்தா இடஒதுக்கீடு குறித்து உறுதி அளித்தார். இந்த உறுதிமொழியை நிறைவேற்ற அக்டோபர் 24-ந் தேதி வரை கெடு விதிக்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரா அரசு தங்களது வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில் மனோஜ் ஜராங்கே மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்.
இதனால் மராத்தா சமூகத்தினர் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். மராத்தா சமூக இடஒதுக்கீட்டை எதிர்க்கும் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. இன்னொரு பக்கம், மராத்தா இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் ஹேமந்த் பாட்டீல், ஹேமந்த் கோட்சே ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த இருவருமே மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதேபோல பல எம்.எல்.ஏக்களும் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து வருவதால் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications