மராத்தி vs கன்னடா மொழிப்போர்-கர்நாடகாவில் 22-ந் தேதி பந்த்- மகாராஷ்டிரா பேருந்துகளுக்கு நேர்ந்த கதி!
மும்பை: மகாராஷ்டிராவின் மராத்தி மற்றும் கர்நாடகாவின் கன்னடா மொழியை முன்வைத்து இரு மாநிலங்களுக்கு இடையேயான பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. கர்நாடகா பேருந்து ஓட்டுநர், நடத்துநரை மராத்தி மொழி பேசும் மக்கள் தாக்கியதைக் கண்டித்து வரும் 22-தேதி மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்துக்கு கர்நாடகா மாநில பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம், மகாராஷ்டிரா எல்லையில் உள்ளது. இந்த எல்லைப் பகுதி கிராமங்களுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு உரிமை கோரி வருகிறது. இப்பகுதியில் மராத்தி மொழி பேசும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதால் மகாராஷ்டிராவுடன் தங்களை இணைக்க வேண்டும் எனவும் அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடகா மாநில அரசு பேருந்தில் பயணச் சீட்டு கொடுக்கும் விவகாரத்தில் கன்னடத்தில் நடத்துநர் பேசியதற்கு மராத்தி மொழி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தகராறில் முடிந்தது. இதனையடுத்து மகாராஷ்டிரா மாநில அரசு பேருந்துகளை கன்னட மொழி அமைப்பினர் தாக்கினர். இதனால் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிடையேயான பேருந்து போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இது தொடர்பாக இரு மாநில அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.
இந்த நிலையில் கர்நாடகா எல்லைக்கு வந்த மகராஷ்டிரா அரசு பேருந்து ஒன்றை கன்னட மொழி அமைப்பினர் நேற்று தடுத்தினர்; அந்த பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை கீழே இறக்கிவிட்ட கன்னட அமைப்பினர் அவர்களுக்கு சால்வை அணிவித்தனர். பின்னர் மகாராஷ்டிரா அரசு பேருந்தின் மீது ஜெய் கர்நாடகா என கன்னட மொழியில் எழுதினர்; அத்துடன் அப்பேருந்தின் மீது ஏறி நின்று கர்நாடகா கொடியை உயர்த்திப் பிடித்து முழக்கமும் எழுப்பப்பட்டது.
#WATCH | Karnataka | Language row: Pro-Kannada activists stopped a Maharashtra State Road Transport Corporation Bus in Karnataka's Kalaburagi. They felicitated the bus driver and conductor with shawls. Later, they wrote "Jai Kannada" on the bus pic.twitter.com/X3QL7GQuua
— ANI (@ANI) March 1, 2025
இந்த பரபரப்புகளுக்கு நடுவே, மராத்தி மொழி அமைப்பினரின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் 22-ந் தேதி கர்நாடகா மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என கர்நாடகா மாநில பாஜக தெரிவித்துள்ளது. அன்றைய தினம் நடைபெறும் மாணவர்களுக்கான தேர்வுகள் பாதிக்காத வகையில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் எனவும் கர்நாடகா பாஜக அறிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications