காங்கிரஸ்க்கு கூட சப்போர்ட் செய்திருப்போம்.. கட்சி முக்கியம் அல்ல! ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் பரபர பேச்சு
நாக்பூர்: தனிநபரையோ அல்லது அரசியல் கட்சியையோ ஆர்.எஸ்.எஸ் ஆதரிப்பது இல்லை என்றும் காங்கிரஸ்க்கு கூட சப்போர்ட் பண்ணியிருப்போம் என்றும் மோகன் பகவத் கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி ஆதரித்திருந்தால், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அவர்களுக்கே ஆதரவளித்திருப்பார்கள் என்று மோகன் பகவத் கூறினார்.
பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நாக்பூரில் நடைபெற்றது. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இதில் ஏற்பாடு செய்யப்பட்ட கேள்வி பதில் உரையாடலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவராக இருக்க கூடிய மோகன் பகவத் பங்கேற்று பேசினார். மோகன் பகவத் அப்போது பேசியதாவது:

காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து இருப்போம்
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தனிநபரையோ அல்லது அரசியல் கட்சியையோ ஆதரிப்பதில்லை.. கொள்கைகளை மட்டுமே ஆதரிக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி ஆதரித்திருந்தால், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அவர்களுக்கே ஆதரவளித்திருப்பார்கள்.
நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிப்பதில்லை. தேர்தல் அரசியலிலும் பங்கேற்பதில்லை. கொள்கைகளுக்கு மட்டுமே நாங்கள் ஆதரவளிக்கிறோம். உதாரணமாக, அயோத்தியில் ராமர் கோயில் அமைய வேண்டும் என விரும்பினோம். அதன் கட்டுமானத்திற்கு எங்கள் உறுப்பினர்கள் துணை நின்றனர். எங்கள் கோரிக்கையை பாஜக நிறைவேற்றியது.
யாருக்கு வேண்டுமானாலும்
"காங்கிரஸ் இதை ஆதரித்திருந்தால், எங்கள் சுயம்சேவகர்கள் அந்தக் கட்சிக்கே வாக்களித்திருப்பார்கள்." "எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட கட்சி மீது சிறப்பு ஈர்ப்பு இல்லை. இந்த நாடு ஒரு குறிப்பிட்ட திசையில் செல்ல வேண்டும் என்பது எங்கள் கருத்து. அந்த திசையில் நாட்டை வழிநடத்தும் யாருக்கு வேண்டுமானாலும் நாங்கள் ஆதரவளிப்போம்" என்றார்.
முஸ்லீம்கள் வந்தால் சேர்ப்பீர்களா
முஸ்லிம்கள் ஆர்.எஸ்.எஸ்-ல் சேர அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த மோகன் பகவத் கூறியதாவது:- "ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் எந்தப் பிராமணரும் அனுமதிக்கப்படுவதில்லை, எந்தச் சாதியைச் சேர்ந்தவரும் அனுமதிக்கப்படுவதில்லை, எந்த முஸ்லிமும் அனுமதிக்கப்படுவதில்லை, எந்தக் கிறிஸ்தவரும் அனுமதிக்கப்படுவதில்லை.
வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம்கள் அல்லது கிறிஸ்தவர்கள், தங்கள் தனித்தன்மையை ஒதுக்கி வைத்துவிட்டு சங்கத்தில் சேரலாம். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு வரும்போது, பாரத மாதாவின் பிள்ளைகளாக வருகிறீர்கள். முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அமைப்புக்கு வருகிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதில்லை, அவர்கள் யார் என்று கேட்பதில்லை, என்றார்.
காங்கிரஸ் வைக்கும் விமர்சனம்
ஆர்.எஸ்.எஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இல்லாதது ஏன் என்ற காங்கிரஸ் தலைவர்கள் வைக்கும் விமர்சனம் தொடர்பாக மோகன் பகவத் கூறும் போது, "இந்தக் கேள்விக்கு பல முறை பதிலளிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கேள்வி கேட்பவர்கள் மீண்டும் மீண்டும் அதையே கேட்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் 1925 இல் தொடங்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?"
"சுதந்திரத்திற்குப் பிறகு, கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டங்கள் கூறவில்லை. 'தனிநபர்களின் அமைப்புக்கும் சட்ட அங்கீகாரம் இருக்கிறது. நாங்கள் தனிநபர்களின் அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளோம், நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. மூன்று முறை தடை செய்யப்பட்டோம், அப்படியானால் அரசாங்கம் எங்களை அங்கீகரித்துள்ளது என்றுதானே அர்த்தம்?..
ஆர்.எஸ்.எஸ் "வலுப்பெறுகிறது
நாங்கள் இல்லாவிட்டால் அவர்கள் யாரைத் தடை செய்திருப்பார்கள்? ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்கள் தடையை ரத்து செய்தன. ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆதரவாகவும் எதிராகவும் பலமுறை சட்டசபைகளிலும் நாடாளுமன்றத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டு, அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
சட்டபூர்வமாகவும், உண்மையாகவும் நாங்கள் ஒரு அமைப்பு. நாங்கள் அரசியலமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல.. அதனால் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. பதிவு செய்யப்படாத பல விஷயங்கள் உள்ளன. இந்து தர்மம்கூட பதிவு செய்யப்படவில்லை," எதிர்ப்பு ஏற்படும்போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் "வலுப்பெறுகிறது" என்றார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications