"70+ கிமீ" அப்படியே நின்ற வாகனங்கள்! 5வது நாளாக தொடரும் டிராபிக் ஜாம்! மொத்தமாக முடங்கும் மும்பை சாலை
மும்பை: மும்பை அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 5வது நாளாக டிராபிக் ஜாம் தொடர்கிறது. அங்குப் பல கிமீ தூரத்திற்குச் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அங்கு மிக மோசமான நிலை உருவாகியுள்ளது. பல நூறு மக்கள் சாலையிலேயே நகர முடியாமல் தவித்து வருகிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் டிராபிக் பாதிப்பு என்பது முக்கிய பிரச்சினையாக மாறி வருகிறது. முன்பு ஓரிரு இடங்களில் மட்டுமே இருந்த டிராபிக் பிரச்சினை இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு டிராபிக் சிக்கல் ரொம்பவே மோசமான நிலையை அடைந்துள்ளது.

5ம் நாளாக டிராபிக்
இதற்கிடையே மும்பை அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலை (NH-48) ஏற்பட்ட டிராபிக் ஜாம் 5வது நாளாக இன்றும் தொடர்கிறது. அங்குச் சாலையில் வாகனம் நகராமல் அப்படியே இருப்பதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சுமார் 70+ கிமீ தொலைவுக்கு வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் உதவியற்று தவித்து வருகிறார்கள்.. மேலும், அங்குச் சாலையில் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் சிக்கியுள்ளது. 5வது நாளாக டிராபிக் நீடிக்கும் நிலையில், பொதுமக்கள் பலரும் விமானம் மற்றும் ரயில்களைப் பிடிக்க முடியாமல் விட்டுள்ளனர்.
காரணம் என்ன!
தானேயில் உள்ள காயாமுக் காட்ஸ் பகுதியில், சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கனரக வாகனங்கள் அந்த சாலையில் செல்லக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இந்த அறிவிப்பையும் யாரும் மதிக்கவில்லை.. தடையை மீறிப் பல கனரக வாகனங்கள் அப்பாதையில் சென்றதால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இப்போதும் அந்த சாலையில் சென்றால் பல மணி நேரம் மாட்டிக் கொள்ளும் நிலையே இருக்கிறது. அவசர வாகனங்கள் கூட நெரிசலில் சிக்கி நகர முடியாமல் திணறியுள்ளன. இது அங்கு நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அந்த நேரம் குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலை 48ல் இதுபோல நடப்பது இது முதல்முறை இல்லை.
தொடரும் சோகம்
கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக NH-48 நெடுஞ்சாலையில் பயணிகள் இதேபோன்ற துயரங்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். வெர்சோவா பாலத்தின் பழுதுபார்க்கும் பணிகள், புதிய பாலம் கட்டும் பணிகள் எனக் கடந்த 2, 3 ஆண்டுகளாகவே தொடர்ச்சியான போக்குவரத்து நெரிசல் நிலவியது. அதுவும்
மழைக்காலத்தில் நிலைமை மேலும் மோசமானது.
மழைநீர் காலங்களில் சாலைகளில் இருக்கும் பள்ளங்களை மழை நீர் நிரப்பிவிடும். இதனால் எங்குப் பள்ளம் இருக்கிறது என்றே தெரியாமல் வண்டிகள் அதில் சென்று சிக்கிக் கொள்ளும். மழை குறைந்த பிறகு சாலைகள் மேலும் மோசமாக சேதமடைந்துவிடுகின்றன. இந்தச் சாலையை சிமெண்ட் கான்கிரீட் சாலையாக மாற்ற ரூ. 600 கோடி செலவிடப்பட்ட பின்னரும், போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்வதே மக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை இணைக்கும் இந்த NH-48, மும்பை, தானே, புனே வழியாகச் செல்லும் ஒரு முக்கிய சாலையாகும். பல டன் சரக்கு போக்குவரத்து இந்த சாலையில் மட்டும் நடக்கிறது. அப்படியிருக்கும்போது இந்த சாலை இவ்வளவு மோசமான நிலையில் இருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
அங்குள்ள வசாய்- விரார் பகுதி மக்கள் மும்பை செல்ல வேண்டும் என்றால் இந்த NH-48 மட்டுமே ஒரே வழி. இதனால் இந்த டிராபிக் ஜாம்மால் இந்த பகுதி மக்கள் தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல மண நேரம் வரை டிராபிக் அதிகரித்துள்ளது. டிராபிக்கை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications