மும்பையில் தடுப்பூசி பெற்ற டாக்டருக்கு கொரோனா பாதிப்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தடுப்பூசி பெற்ற டாக்டர் ஒருவருக்கு கொரோனா வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வைரஸிற்கான நோய் எதிர்ப்பு சக்தி முதல் தடுப்பூசி கிடைத்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு உருவாகத் தொடங்குகிறது. வலிமையான நோய் எதிர்ப்பு சக்திக்கு 2-வது டோஸ் அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வந்தது. மகாராஷ்டிராவில் முதலில் கட்டுக்கடங்காமல் ஆடிய கொரோனா பின்னர் அடங்கியது. இந்த நிலையில் அங்கு மீண்டும் கொரோனா ஆட்டம் காட்டி வருகிறது. சுமார் 3 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 6,000-க்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால் நாகபூர் உள்ளிட்ட சில இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மும்பை பிஒய்எல் நாயர் மருத்துமனையில் பணிபுரியும் 46 வயதான டாக்டர் ஒருவர் ஒன்பது நாள்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி பெற்றார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தற்போது அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டார்.
இது தொடர்பாக கொரோனா வைரஸ் குறித்த மாநில அரசின் பணிக்குழுவில் உறுப்பினராக உள்ள தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஓம் ஸ்ரீவாஸ்தவ் கூறியதாவது:- ஒரு நபர் தடுப்பூசி பெற்ற பிறகும் அவர் தொற்றால் பாதிக்கப்படலாம். வைரஸிற்கான நோய் எதிர்ப்பு சக்தி முதல் தடுப்பூசி கிடைத்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு உருவாகத் தொடங்குகிறது. வலிமையான நோய் எதிர்ப்பு சக்திக்கு 2-வது டோஸ் அவசியம்.
நீங்கள் முதல் தடுப்பூசி பெறும்போது நோய் எதிர்ப்பு சக்தி உச்சத்தில் இருக்கும். இது 100 சதவீதமாக இருக்குமா இல்லையா என்று சொல்வது கடினம். இது மிக ஆரம்பம். ஆனால் இரண்டாவது டோஸுக்குப் பிறகு நீங்கள் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவீர்கள் என்று ஓம் ஸ்ரீவாஸ்தவ் கூறினார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications