Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்ணின் மார்பகத்தை உற்றுப் பார்ப்பது பாலியல் குற்றமில்லை! மும்பை உயர் நீதிமன்றம் கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: சக பெண் ஊழியரின் மார்பகத்தை ஒரு நபர் உற்றுப் பார்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது போன்ற செயல்கள் அநாகரிகமான ஒன்றே தவிர, இதனை பாலியல் குற்றமாக சட்டரீதியாக வகைப்படுத்த முடியாது என நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த வழக்கு குறித்து நாம் பார்க்கலாம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது உடலை உடன் வேலை செய்யும் நபர் ஒருவர் பார்த்தாக பெண் ஒருவர் புகாரளித்திருந்தார். சம்பந்தப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், ஐபிசி பிரிவு 354-சி (voyeurism) மற்றும் 509 (பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல்) ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது வழக்குப் பதியப்பட்டிருந்தது. இதனை ரத்து செய்யக் கோரி அந்த நபர் நீதிமன்றத்தை அணுகினார்.

Mumbai High Court on Woman safety Mumbai High Court on Woman safety Staring Woman is Indecent but it is not a Sexual Offence says Mumbai High Court and Quashes FIR

புகார்

பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஆகிய இருவருமே ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அலுவலகக் கூட்டங்களின்போது அந்த நபர் தனது மார்பகத்தை நீண்ட நேரம் உற்றுப் பார்த்ததாகவும், இதனால் தான் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளானதாகவும் அந்தப் பெண் புகார் அளித்திருந்தார். மேலும், இது தொடர்பாகத் தான் அலுவலக மேலாளரிடம் புகார் அளித்தபோது, சம்பந்தப்பட்ட நபர் மன்னிப்புக் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் குற்றமல்ல

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சட்டத்தின் நுணுக்கங்களைச் சுட்டிக்காட்டி சில முக்கியக் கருத்துகளைப் பதிவு செய்தது. voyeurism தொடர்புடைய சட்டப்பிரிவு 354-சி தொடர்பாக நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளது. அதாவது ஒரு பெண் தனது தனிப்பட்ட அந்தரங்கச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் போது, அதாவது அவர் தன்னை பார்க்கப்படுவதை விரும்பாத சூழலில், அவரைப் படம் பிடிப்பதோ அல்லது மறைந்திருந்து நோட்டமிடுவதோ தான் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் வரும் என்றனர்.

இந்த குறிப்பிட்ட வழக்கு அலுவலகத்தில் நடந்துள்ளது.. அலுவலக மீட்டிங் என்பது அலுவலகக் கூட்டம் என்பது ஒரு பொதுவான சூழல். அங்கு ஒருவரை உற்றுப் பார்ப்பது அநாகரிகமானது என்றாலும், அது சட்டப்படி இந்தத் தீவிரக் குற்றத்தின் கீழ் வராது என நீதிபதிகள் கூறியுள்ளனர். நீதிபதிகள் மேலும், "சந்தேகத்திற்கு இடமின்றி, ஒரு பெண்ணின் உடலை இத்தகைய முறையில் உற்றுப் பார்ப்பது ஒரு தவறான நடத்தை மற்றும் அநாகரிகமான செயல். ஆனால், ஒவ்வொரு அநாகரிகமான செயலும் சட்டத்தின் கீழ் இத்தகைய பெரிய குற்றமாகக் கருதப்பட முடியாது" என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

நீதிபதிகள் சொல்வது என்ன

குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது ஏற்கனவே துறை ரீதியான விசாரணை நடந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சட்டப்படி பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் நோக்கம் இருந்ததற்கான போதிய ஆதாரங்கள் இந்தச் சூழலில் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது. அதாவது இது தவறில்லை என நீதிபதிகள் சொல்லவில்லை.. இருப்பினும், இந்த கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த செயலுக்கு வழக்குப்பதிவு செய்ய முடியாது எனக் கூறியுள்ளனர்.

எப்ஐஆர் ரத்து

உரியச் சட்டப்பிரிவுகளின் கீழ் இந்தக் குற்றச்சாட்டுகள் பொருந்தாது என்பதைக் கருத்தில் கொண்டு, அந்த நபர் மீதான எப்.ஐ.ஆரை நீதிமன்றம் ரத்து செய்தது. அதே சமயம், இதுபோன்ற செயல்கள் அலுவலக ஒழுக்கத்திற்கு எதிரானது என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டத் தவறவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் மார்பகத்தை முறைத்துப் பார்ப்பது கண்ணிய குறைவுதான் என்றாலும் சட்டத்தின் பார்வையில் அது பாலியல் குற்றம் எனக் கருத முடியாது என்றே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+