ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமிற்குள் மனித விரல்.. உலர் பழம் என கடித்தவருக்கு ஷாக்! அதிர்ந்த மும்பை

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய ஐஸ்கிரீமிற்குள் மனித விரல் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலர் பழம் என நினைத்து மனித விரலை கடித்த மருத்துவர், தான் கடித்தது விரல் என்று தெரிந்ததும் ஒரு நிமிடம் நிலைகுலைந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

வீட்டிற்கு தேவையான மளிகை பொருள் முதல் உணவு பொருள் வரை அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கொள்ள முடியும். அதிலும் நகர்புறங்களில் உணவு டெலிவரிதான் அதிகம் நடப்பதை பார்க்க முடிகிறது. நமக்கு பிடித்த உணவுகளை, பிடித்த ஹோட்டல்களில் இருந்து வீட்டில் இருந்தே வாங்கி கொள்ள முடியும் என்பதால் பலரும் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள்.

Ice Cream Mumbai weird Trend

இதேபோலத்தான் மும்பையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆன்லைனில் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்து இருக்கிறார். ஐஸ்கீரிம் கைக்கு வந்ததும் ஆசை ஆசையாய் வாங்கி ருசித்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது, ஐஸ்கிரீமிற்குள் மனித விரல் ஒன்று கிடந்துள்ளது. இதைப் பார்த்த அந்த மருத்துவர் ஒரு நிமிடம் நிலை குலைந்து போயிருக்கிறார். இது குறித்த விவரம் வருமாறு:-

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மலாடு பகுதியை சேர்ந்தவர் ஓரலெம் பிரண்டன். மருத்துவரான இவர் ஆன்லைனில் நேற்று ஆர்டர் செய்துள்ளார். மளிகை பொருட்கள் வாங்கும் போது அதனுடன் சேர்த்து ஐஸ்கிரீமும் ஆர்டர் செய்து இருக்கிறார். மருத்துவரின் சகோதரி கேட்டுக்கொண்டதால் ஐஸ்கிரீமை ஆர்டர் போட்டு இருக்கிறார்.


சிறிது நேரத்தில் வீட்டு முன்பாக மளிகை பொருட்களையும், ஐஸ்கிரீமையும் டெலிவரி மேன் கோண்டு வந்து கொடுத்து விட்டு சென்றார். ஐஸ்கிரீமை ஒரு கை பார்த்து விடலாம் என்ற ஆசையில் அதை சாப்பிட தொடங்கினார். அப்போது நறுக் என ஒரு பொருள் கடிபட்டுள்ளது. ஐஸ்கீரிமிற்குள் கிடக்கும் உலர் பழங்களாக இருக்கும் என நினைத்து பெரிதாக எடுத்துக் கொள்ளமால் இருந்தவர் சில வினாடிகளில் வித்தியாசமாக உள்ளதே என நினைத்துள்ளார்.


அப்போதுதான் ஐஸ்கிரீமிற்குள் கிடந்தது மனித விரல் என அவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஒரு நிமிடம் நிலைகுலைந்துள்ளார். ஐஸ்கிரீமிற்குள் மனித விரல் கிடக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே மருத்துவர் செர்ரோ, நடந்த விஷயத்தை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், செர்ரோ கூறியிருப்பதாவது:-

ஆன்லைன் ஆப் மூலமாக 3 கோன் ஐஸ்களை நான் ஆர்டர் செய்தேன். அதில் ஒரு ஐஸ்கீரிம் பட்டர்ஸ்காட்ச் பிளேவர் ஆகும். மிகவும் பிடித்தமான அந்த பிளேவர் ஐஸ்கிரீமை பாதியளவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திடமான ஒரு பொருள் கடிபட்டது. முதலில் அது சாக்லேட் துண்டு அல்லது நட் ஆக இருக்கும் என நினைத்தேன். சரி அது என்னவென்று பார்ப்பதற்காக துப்பினேன்.


வித்தியாசமானதாக இருக்கிறதே என்று நான் உற்று பார்த்த போது, நகம் மற்றும் விரல் ரேகை தெரிந்தது. கட்டை விரல் போல இருந்ததால் நான் ஒரு நிமிடம் நிலைகுலைந்துவிட்டேன். உடனடியாக அதை எடுத்து ஐஸ்பேக்கிற்குள் வைத்து காவல்துறையிடம் புகார் அளித்து இருக்கிறேன். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐஸ்கிரீமிற்குள் கிடந்த விரலை தடயவியல் சோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+