Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்து உணர்வுகளை புண்படுத்திய நயன்தாரா-ஜெய்.. ‛அன்னபூரணி’ படத்தால் வந்த சிக்கல்.. எப்ஐஆர் பதிவு

Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் நடிப்பில் உருவான அன்னபூரணி படத்துக்கு எதிராக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையல் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் நடிகர் ஜெய்யுடன் ‛ராஜா ராணி’ திரைப்படத்தில் இணைந்து நடித்தார். அதன்பிறகு இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‛அன்னபூரணி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

Mumbai police FIR filled against Nayanthara and Jai acted Annapoorani Movie for hurting Hindu sentiment

இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிலஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். திரைப்படத்தில் நயன்தாரா, ஜெய் உடன் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, ரேணுகா, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த மாதம் திரையங்குகளில் வெளியானது. தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் திரைப்படத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

‛சரக்கு’ பட சர்ச்சை.. வழக்கறிஞரின் கழுத்து பட்டையால் வந்த சிக்கல்! மன்சூருக்கு கோர்ட் அதிரடி ஆர்டர்

அதாவது படத்தில் சிறந்த சமையல் கலைஞராக நடிகை நயன்தாரா மாற நினைப்பார். அவர் சிறந்த சமையல் கலைஞராக மாறினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் முடிவாகும். இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. நடிகர் நயன்தாரா-ஜெய் இடையேயான ஒரு காட்சியில் நடிகர் ஜெய் கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டார் என கூறுகிறார்.

அதாவது ‛‛ராமாயணத்தை வால்மீகி எழுதியுள்ளார். அதில் வனவாசத்தின்போது ராமன், லட்சுமணன் ஆகியோர் வேட்டையாடிய உணவை சீதாவுடன் சாப்பிட்டனர். அதனால் ராமன் விஷ்ணுவின் அவதாரம் இல்லை என சொல்லி விட முடியுமா?’’ என்பன போன்ற வசனங்கள் இடம்பெற்றிருந்தது. அதோடு அர்ச்சகரின் மகளாக இருந்து கொண்டு நமாஸ் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேனியில் டிடிவி தினகரன் போட்டி? லோக்சபா தேர்தலில் எதிர்க்க போகும் மன்சூர் அலிகான்! பரபர அறிவிப்பு

மேலும் இதுதொடர்பாக ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி பார்க் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஜாதின் சேதி ரவீந்திரா புனித் கோனேகா ஜீ ஸ்டியோஸ் தலைமை அதிகாரி (Bussiness) ஷாரிக் படேல், நெட்பிளிக்ஸ் இந்திய தலைமை அதிகாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரை தொடர்ந்து தற்போது மும்பை போலீசார் அன்னபூரணி படத்துக்கு எதிராக போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+