மும்பை குண்டுவெடிப்பு உட்பட 60 வழக்குகளில் தொடர்பு... பரோலில் வந்து தலைமறைவான ஜலீஸ் அன்சாரி கைது!
Recommended Video
மும்பை: நாட்டை உலுக்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு உட்பட 60 வழக்குகளில் தொடர்புடைய ஜலீஸ் அன்சாரி (வயது 68) பரோலில் வந்த நிலையில் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஜலீஸ் அன்சாரி கைது செய்யப்பட்டார்.
1993-ல் மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 250 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயமடைந்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவர் ஜலீஸ் அன்சாரி.

2008-ம் ஆண்டு ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவம் உட்பட 60 வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவர் ஜலீஸ் அன்சாரி. ராஜஸ்தானின் அஜ்மீர் சிறையில் இருந்த நிலையில் 21 நாட்கள் பரோல் விடுமுறை அவருக்கு அளிக்கப்பட்டது.
இதன்படி நாள்தோறும் மும்பையின் அக்ரிபடா காவல் நிலையத்தில் ஜலீஸ் அன்சாரி கையெழுத்திட வேண்டும். கடந்த 19 நாட்களாக காவல்நிலையத்தில் அன்சாரி கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று அன்சாரி காவல்நிலையத்துக்கு செல்லவில்லை. இதனையடுத்து அவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீஸ் வட்டாரங்களில் டாக்டர் பாம் என அழைக்கப்படுவர் அன்சாரி. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஜலீஸ் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச போலீஸ் டிஜிபி ஓபி சிங் கூறுகையில், கான்பூரில் மசூதி ஒன்றில் தொழுகை நடத்திவிட்டு திரும்பிய ஜலீஸ் அன்சாரியை கைது செய்தோம். தற்போது லக்னோவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார் ஜலீஸ் அன்சாரி என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications