கணவரை கொன்று கிச்சனில் எரித்த மனைவி.. கள்ளக்காதலனுடன் கைது.. 6 வயது குழந்தையையும் மிரட்டிய பெண்
மும்பை: மும்பையில் கணவரை கள்ளக்காதலன் உதவியுடன் கொன்றுவிட்டு உடலை 3 பகுதிகளாக வெட்டி சமையலறையில் எரித்த பெண் கைது செய்யப்பட்டார். அவரது 6 வயது குழந்தை காட்டிக் கொடுத்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவை சேர்ந்தவர் ரயீஸ் ஷேக். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஷாஹிதா ஷேக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பணி நிமித்தமாக இருவரும் மும்பையில் குடியேறினர். இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தையும் 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

கணவர் மிஸ்ஸிங்
கடந்த மே 25 ஆம் தேதி ஷாஹிதா தாஹிசார் காவல் நிலையத்திற்கு கடந்த 21-ஆம் தேதி வீட்டை விட்டு சென்ற கணவரை காணவில்லை என புகார் கொடுத்தார். அவர் வீட்டை விட்டு சென்றதிலிருந்தே அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

வழக்குப் பதிவு
இந்த புகாரை வைத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரயீஸை தேடி வந்தனர். கடந்த 25 ஆம் தேதி ரயீஸின் சகோதரர் அனீஸ் மும்பை சென்றுள்ளார். அவர் நேராக தாஹிசார் காவல் நிலையத்திற்கு சென்று, தனது அண்ணி அவ்வப்போது அவரது வாக்குமூலத்தை மாற்றி வருகிறார் என தெரிவித்தார்.

டைல்ஸ்
இதனால் ஷாஹிதா மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. இவர் எதையோ மறைக்கிறார் என்பதை போலீஸார் உணர்ந்தனர். நேற்று முன் தினம் ரயீஸின் வீட்டிற்கு போலீஸார் வந்தனர். அப்போது வீட்டை சோதனையிட்டனர். சமையலறையில் உள்ள டைல்ஸ்கள் சரிவர இல்லை, மேலும் சில டைல்ஸ்கள் காணாமல் போயிருந்தன.

6 வயது பெண்
பின்னர் தாஹிதாவிடம் போலீஸார் துருவி துருவி விசாரித்தவுடன் தனது கள்ளக்காதலன் அமித் மிஸ்ராவுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டு அவரது உடலை எரித்து விட்டதாக வாக்குமூலம் அளித்தார். இதுகுறித்து ஷாஹிதாவின் 6 வயது பெண் குழந்தையும் , அம்மா செய்ததை தான் கண்ணால் பார்த்ததாக தெரிவித்தது.

அப்பா
மேலும் இந்த உண்மையை வெளியே சொன்னால் அப்பாவை எரித்தது போல் உன்னையும் எரித்துவிடுவதாக அம்மா மிரட்டியதாகவும் அந்த 6 வயது குழந்தை தெரிவித்தது. இதையடுத்து ஷாஹிதாவிடம் விசாரணை நடத்தியதில் தனக்கு பக்கத்து வீட்டுக்காரர் அமித் மிஸ்ராவுடன் கள்ளக்காதல் இருந்தது.

கள்ளக்காதல்
இது கணவர் ரயீஸுக்கு தெரியவந்து கள்ளக்காதலை உடனடியாக நிறுத்துமாறு கண்டித்தார். இதையடுத்து கடந்த மே 22 ஆம் தேதி கணவர் ரயீஸை தானும் அமித்தும் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் அதை 6 வயது குழந்தை பார்த்துவிட்டதால் அவரது உடலை மூன்று பகுதிகளாக வெட்டி சமையலறையில் வைத்து எரித்ததாக ஷாஹிதா கூறியதை அடுத்து அவரையும் அமித்தையும் போலீஸார் கைது செய்தனர்.
-
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications