இந்து மாணவிகளிடம் பேசிய இஸ்லாமிய மாணவர் மீது தாக்குதல்! சாவித்ரிபாய் புலே பல்கலை.யில் ஷாக்
மும்பை: புனேவின் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் இந்து பெண்களுடன் பேசியதற்காக இஸ்லாமிய மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் பவன் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. திறன் மேம்பாட்டு பிரிவில் இஸ்லாமிய மாணவர் ஒருவர் பயின்று வந்திருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இவர் தனது சக மாணவர்கள் மற்றும் மாணவிகளுடன் பாபா சாகேப் அம்பேத்கர் பவனில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது மூன்று பைக்குகளில் 6 இளைஞர்கள் அங்கு வந்திருக்கிறார்கள். அவர்கள், இஸ்லாமிய மாணவரிடம் ஆதார் கார்டை காட்டுமாறு கேட்டிருக்கிறார்கள். மாணவர் மறுத்திருக்கிறார். பின்னர், அந்த மாணவர் சார்ந்திருக்கும் இஸ்லாம் மதம் குறித்து இளைஞர்கள் அவதூறாக பேசியிருக்கிறார்கள். லக் ஜிகாத் மூலம் தங்கள் மதத்தை சேர்ந்த பெண்களை இஸ்லாமியர்களாக மாற்ற முயற்சிப்பதாக மாணவரை இளைஞர்கள் சரமாரியாக அவதூறாக பேசியிருக்கிறார்கள். இது வாக்குவாதத்தை கிளப்பியிருக்கிறது.
இதனையடுத்து இளைஞர்கள், இஸ்லாமிய மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்கும் போது இந்து பெண்களுடன் பேசக்கூடாது, ஒன்றாக அமர்ந்து சாப்பிட கூடாது, அவர்களுடன் சேரக்கூடாது என்று கூறியுள்ளனர். திடீர் வன்முறையால், மாணவிகளும், சக மாணவர்களும் கேன்டீனிலிருந்து அலறியடித்து ஓடியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அனைவருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்று போராடிய, சாவித்ரிபாய் புலே பெயரை கொண்ட கல்வி நிலையத்தில், சிறுபான்மை மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இடதுசாரி மாணவர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மாணவர் தாக்கப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே டெல்லி ஜேஎன்யுவில் இது போன்று ஏராளமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், புனேவில் இப்படி நடப்பது இதுதான் முதல்முறை என்று மாணவர் சங்கத்தினர் கூறுகிறனர். மட்டுமல்லாது, இதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications