மகாராஷ்டிராவில் அடுத்த 3 நாள் ரொம்பவே முக்கியம்.. தேர்தல் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதே இதுதான்!
மும்பை: மகாராஷ்டிராவில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அங்கு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. அங்குத் தொகுதிப் பங்கீடு குறித்து அடுத்த 3 நாட்களுக்கு மேஜர் ஆலோசனை நடைபெறுகிறது. இது மகாராஷ்டிர தேர்தல் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதாக அமையும்.
மகாராஷ்டிர மாநிலத்தில் இப்போது ஷிண்டே தலைமையில் பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி கூட்டணி ஆட்சியில் உள்ளது. அங்கு மொத்தம் 288 சீட்கள் உள்ளன. அதில் 145 சீட்களில் வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.

எதிர்க்கட்சிகள் கூட்டணி: மகாராஷ்டிராவில் இப்போது ஆளும் பாஜக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே வரும் நாளை முதல் செப். 20ம் தேதி வரை எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதை தாக்ரே சிவசேனாவின் (யுபிடி) சஞ்சய் ராவத் உறுதி செய்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நவ. இரண்டாவது வாரம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அங்குத் தொகுதிப் பங்கீடு குறித்து அடுத்த 3 நாட்களுக்கு மேஜர் ஆலோசனை நடைபெறுகிறது. இது மகாராஷ்டிர தேர்தல் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
3 நாள் ஆலோசனைக் கூட்டம்: இது தொடர்பாக சஞ்சய் ராவத் மேலும் கூறுகையில், "இந்தக் கூட்டத்தில் யார் எத்தனை சீட்களில் போட்டியிடுவார்கள் என்பது குறித்துப் பேசி முடிவு செய்யப்படும். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது எடுக்கப்படும் முடிவு இறுதி முடிவாக இருக்கும். நாளை செப்டம்பர் 18ம் தேதி தொடங்கும் இந்தப் பேச்சுவார்த்தை செப். 20 வரை நடைபெறும். தொடர்ந்து மூன்று நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள்.. எந்தெந்த இடங்கள் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டே தொகுதிப் பங்கீடு இருக்கும். குறிப்பாக எந்தத் தொகுதியில் யார் போட்டியிட்டால் வெல்ல வாய்ப்பு அதிகம் என்பதை வைத்தே இறுதி முடிவை எடுப்போம்" என்றார்.
பாஜகவுக்கு 150..மகாராஷ்டிராவில் இதுவே தனிப்பெரும்பான்மைக்கு போதுமே! உற்று பார்க்கும் எதிர்க்கட்சிகள்
விளக்கம்: இந்த மகா விகாஸ் அகாதி கூட்டணியில் தாக்ரே சிவசேனா, சரத் பவார் என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மகாராஷ்டிராவில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இந்த ஒவ்வொரு கட்சிகள் பலமாக உள்ளது. எனவே, அதற்கேற்பவும் சீட் பகிர்வு இருக்கும் என்றே தெரிகிறது.
தொகுதிப் பங்கீடு எப்படி: லோக்சபா தேர்தலில் தாக்ரே சிவசேனாவை காட்டிலும், காங்கிரஸ் மற்றும் சரத் பவார் என்சிபி கட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த சஞ்சய் ராவத், "லோக்சபா தேர்தலில் தாக்ரே தரப்பு வாக்குகளே இரு கூட்டணிக் கட்சிகளுக்கும் அதிகம் சென்றது. நாங்கள் வலிமையாக இருந்த பல இடங்களைக் காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்தோம். அந்த தொகுதிகளில் நாங்கள் போட்டியிட்டிருந்தால் எளிதாக வென்றிருப்போம்.
அதேபோல சரத் பவார் தரப்பிற்கும் எங்கள் வாக்கு அதிகம் சென்றது. இதுவும் சரத் பவார் வெற்றிக்குக் காரணமாகும். எனவே, அதை மட்டுமே கருத்தில் கொண்டு தொகுதிப் பங்கீடு இருக்காது. பல விஷயங்களைக் கருத்தில் கொள்வோம்" என்றார்.












Click it and Unblock the Notifications