நீட் போராட்டம் முடிந்த கையோடு சோகம்.. ரிசல்ட்டை பார்த்தவுடன் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒரு பக்கம் இப்போது தான் நீட் தொடர்பான போராட்டம் நடந்து முடிந்தது. ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்த இந்த போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. ஆனால், இன்னொரு பக்கம் அதிர்ச்சி தரும் வகையில் நீட் தேர்வில் மார்க் குறைவாக பெற்றதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நீட் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மோசமான முடிவுகளை எடுப்பது தொடர் கதையாக இருக்கிறது. அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் மீண்டும் இப்போது நடந்துள்ளது. நீட் விவகாரத்தில் ஒரு மாதம் போராட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

neet India

நீட்

மகாராஷ்டிராவின் அகில்யாநகர் மாவட்டத்தில், நீட் தேர்வில் குறைந்த மார்க் எடுத்ததால் மன உளைச்சலில் இருந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அகில்யாநகர் மாவட்டம் ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்த அங்கிதா சாங்க்லே, நீட் தேர்வில் 166 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்த அந்த பெண் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

அந்த பெண் கடந்த சனிக்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில், வீட்டில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவம் நடந்த இடத்தில் மராத்தி மொழியில் எழுதப்பட்ட தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த கடிதத்தை அந்த பெண்ணே தனது கைப்பட எழுதியதாக தெரிகிறது.

மரணம்

அந்தக் கடிதத்தில், "நீங்கள் எனக்கு அளவில்லாத அன்பை கொடுத்தீர்கள். ஆனால் உங்கள் ஒரு ஆசையை கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அம்மா, கஷ்ட காலம் ஒவ்வொன்றிலும் தோழியை போல எனக்கு துணையாக இருந்தீர்கள். அண்ணா, நீங்களும் எனக்கு மிக பெரிய சப்போர்ட்டாக இருந்தீர்கள். அம்மா, அப்பாவை விட நீங்கள் தான் என்னை அதிகமாக நேசித்தீர்கள். என் தற்கொலைக்கு நீங்கள் யாரும் காரணம் இல்லை.

தியாகம்

நீட் தேர்வுக்காக நான் படித்தபோது, எனக்காக நீங்கள் பல தியாகங்கள் செய்தீர்கள். ஆனால் உங்கள் கனவை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அம்மாவையும் அப்பாவையும் நன்றாக பார்த்து கொள்ளுங்கள் அண்ணா! அவர்களுக்கு எந்தக் குறையும் இருக்கக்கூடாது" என்று உருக்கமாக எழுதியுள்ளார். இந்த தற்கொலை கடிதத்தை எழுதி வைத்துக் கொண்டு அந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சோகம்

இந்த சம்பவம் குறித்து போலீசார் திடீர் மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் ஒவ்வொரு ஆண்டும், இதுபோன்ற மோசமான முடிவுகளை சில மாணவர்கள் எடுப்பது தொடர்கதையாக இருக்கிறது. நீட்டில் குறைந்த மார்க் பெறுவதாலேயே மட்டும் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை! மாணவர்கள் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் பெற்றோர் அதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.

தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+