அம்பானி குடும்பத்திற்கு அடுத்தடுத்து.. போன ஷாக் செய்தி.. ஜியோ, ரிலையன்ஸுக்கு லைனில் வந்த சிக்கல்!
மும்பை: அம்பானி குடும்பத்திற்கு அடுத்தடுத்து கெட்ட செய்திகளாக வந்த வண்ணம் உள்ளது. அதிலும் நேற்று வெளியான இரண்டு செய்திகள் அம்பானி குடும்பத்தை உடைத்து போட்டுள்ளது.
அதன்படி டெண்டர்களில் பங்கேற்க ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. போலியான ஆவணங்களை வழங்கி ஏலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் பவர் மற்றும் அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் NU BESS ஆகியவை இனி இந்திய அரசின் Solar Energy Corporation of India (SECI) ஏலம் எதிலும் பங்கேற்க முடியாது.

அதன்படி டெண்டர்களில் பங்கேற்க 3 ஆண்டுகள் தடை விதித்தது இந்திய சூரிய மின்னாற்றல் கழகம். பொதுவாக வங்கிகளின் உத்தரவாத கடிதம் இருந்தால் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். இதற்காக பொய்யான உத்திரவாத கடிதத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கி உள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் தலைவர் அணில் அம்பானி ஆவார்.
கடைசியாக நடந்த ஏலத்தில் முறைகேடுகள் நடத்தப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Solar Energy Corporation of India நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த 2 GWh பவர் திட்டம் ஒன்றிற்கான ஏலத்தில் கூட பங்கேற்க கூடாது என்று ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
போதாத காலம்: சரியாக சொல்ல வேண்டும் என்றால் அம்பானி குடும்பத்திற்கு இது போதாத காலம்.. அவர்களுக்கு அடுத்தடுத்து கெட்ட செய்திகளாக வந்த வண்ணம் உள்ளது. அதிலும் நேற்று வெளியான இரண்டு செய்திகள் அம்பானி குடும்பத்தை உடைத்து போட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு பக்கம் அலைக்கற்றை ஏலம் இனி நடக்காது என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் இதனால் இந்தியாவில் அலைக்கற்றை வாங்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் இந்த முடிவு காரணமாக இந்தியாவை சேர்ந்த ஜியோ, ஏர்டெல், விஐ போன்ற நிறுவனங்களுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளன. அலைக்கற்றை நிர்வாக ரீதியாக ஒதுக்கீடு செய்யப்படும். இந்த முறை அலைக்கற்றை ஏலம் விடப்படாது என்று அறிவித்து உள்ளனர்.
இந்திய கோடீஸ்வரர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் ஆகியோர் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீட்டை எப்போதும் போல ஏலம் முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் இந்திய மார்க்கெட்டில் நுழைய தீவிரமாக முயன்று வரும் எலான் மஸ்க் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு யாருக்கு சாதகமாக முடிவு எடுக்க போகிறது என்ற கேள்வி நிலவிய நிலையில்தான்.. அலைக்கற்றை ஏலம் இனி நடக்காது என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கிற்கு சாதகமாக இந்த முடிவு அமைந்துள்ளது.
அலைக்கற்றையானது குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு.. நிர்வாக அடிப்படையில் விற்பனை செய்யப்படும் . டிராய் இதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும். உலகம் முழுக்க அலைக்கற்றை எங்கும் ஏலம் விடப்படுவது இல்லை. நிர்வாக அடிப்படையிலேயே அலைக்கற்றை அளிக்கப்படுகிறது. இதை சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் எனப்படும் International Telecommunications Union (ITU) கண்காணிக்கிறது. அந்த வகையில் இந்தியாவிலும் அதே முறையை பின்பற்றி நிர்வாக அடிப்படையில் அலைக்கற்றையை வழங்குவோம்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications