Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லி சல்லியாக தங்கம்.. சல்லடையுடன் கோதாவரி ஆற்றில் தங்க வேட்டை.. நிஜ புதையல் கதை

Subscribe to Oneindia Tamil

மும்பை: பொதுவாக நம்மூரில் வைகை அல்லது காவிரி வறண்டால், தாமிரபரணி மட்டும் வற்றாது அதனை விட்டுவிடுவோம்... மற்றபடி பெரும்பாலான மக்களுக்கு, ஆறு குறைந்தால் வறட்சி ஏற்பட்டதாக அர்த்தம். ஆனால் மகாராஷ்டிராவின் பைதன் நகரத்தில் உள்ள உள்ளூர்வாசிகளுக்கு மட்டும் கோதாவரி ஆற்றில் நீர் மட்டம் குறையும் போது, ​​தங்கம் புதையல் போல் கிடைக்கும் இடமாக இருக்கிறது. தங்கப் புதையல் தேடி ஆற்றங்கரைக்குச் செல்ல வேண்டிய நேரமாக இருக்கிறது. மக்கள் சல்லடையுடன் தங்கம் தேடி அலையும் கதையை பார்ப்போம்.

தங்கம் இன்றைய தேதிக்கு யாருக்குத்தான் பிடிக்காது, தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேனே நானு..வைரமே ஒருநாள் உன்னை தூக்குவேனே.. என்று பாட்டு பாடதவர்களே இல்லை.. ஏனெனில் தங்கம் விலை 1.16 லட்சத்தை தாண்டி விற்கிறது. ஒரு சவரன் தங்க நகை வாங்கினால் ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரம் எல்லாம் சேர்த்து 1.30 லட்சம் என்கிற அளவில் மாறி உள்ளது.

paithan godavari gold Gold hunting in the Godavari River with a sieve A real treasure story

அதேநேரம் சிலருக்கு அபூர்வமாக தங்கம் புதையல் போல் கிடைக்கும். அதிர்ஷ்டமும், தீவிரமான தேடுதலும் உள்ளவர்களுக்கு ஒரு ஆற்றில் கிடைக்கிறது. அது ஒன்றும் தங்க சுரங்கம் அல்ல.. மக்கள் ஆற்றில் வீசும் தங்கம் தான்.. என்னங்க சொல்றீங்க, மக்கள் தங்கத்தை ஆற்றில் வீசுவார்களா என்று கேட்டீர்கள் என்றால்.. ஆம் சிலர் வீசுகிறார்கள். கோதாவரி ஆற்றில் தான் நடக்கிறது.

சல்லடைகள் மற்றும் வலைகளுடன் ஆயுதம் ஏந்திய மக்கள், சல்லடைகள் மற்றும் வலைகளுடன், திங்கட்கிழமை கோதாவரி நதியின் கரையில் திரண்டனர், தண்ணீர் குறைந்து வருவதால் விலைமதிப்பற்ற பொருட்களைத் தேடினர்.

துக்கத்தில் இருக்கும் உறவினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக இறுதிச் சடங்குகளைச் செய்து, நகைகள், நாணயங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை வீசி எறியும் இடமாக கோதாவரி நதி இருந்து வருகிறது. மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திராவில் ஓடும் கோதாவரி ஆற்றில் ஆண்டு முழுவதும் பொதுமக்கள் இறந்து போன தங்களது உறவினர்களின் அஸ்தியை கரைக்க வருவதுண்டு. அவ்வாறு அஸ்தியை கரைக்கும்போது பொதுமக்கள் இறந்தவர்களுக்கு மிகவும் விருப்பமான தங்கம், வெள்ளி, நாணயங்களை ஆற்றில் போடுவார்கள். அவ்வாறு போடப்படும் பொருட்கள் ஆற்றங்கரையில் சகதியில் கிடக்கும்.

அந்த தங்கத்தை எடுக்கத்தான் கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் போட்டிபோடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் மகாராஷ்ராவின் பைதன் நகரில் ஏக்நாத் மகாராஜா கோயில் திருவிழா நடப்பது வழக்கம். இத்திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் மாநிலம் முழுவதும் இருந்து பைதான் வருவதுண்டு. எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜெயக்வாடி அணையில் இருந்து கோதாவரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோதாவரி ஆற்றில் தண்ணீர் மட்டம் குறைந்து கரைகள் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

இதனால் நாம் ஏற்கனவே கூறியபடி, உறவினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக இறுதிச் சடங்குகளைச் செய்து, நகைகள், நாணயங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை வீசிய கோதாவரி ஆற்றில், அவற்றை எடுப்பதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கையில் சல்லடை மற்றும் கூடையுடன் ஆற்றில் இறங்கி தங்கம் தேடி வருகிறார்கள். சிறுவர் முதல் பெரியவர் என அனைவரும் தங்களுக்கு எதாவது கோதாவரி ஆற்றில் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆற்றில் இருந்து மண்ணை எடுத்து சலித்து வருகின்றனர்.

இதில் அவர்களுக்கு அதிக அளவில் நாணயங்கள் கிடைக்கிறது. தங்கம் எத்தனை பேருக்கு கிடைத்தது என்ற தகவல்கள் இல்லை. எனினும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆற்றில் இறங்கி சகதிக்குள் எதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கின்றனர். சிலர் குடும்பத்தோடு வந்து தங்கத்தை புதையால நினைத்து தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் யாருக்கு தங்கம் என்ற புதையல் கிடைக்க போகிறது என்பது தெரியவில்லை..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+