இவ்ளோ வருஷம் விட்டுட்டீங்க.. குடியுரிமை பெறாமல் இந்தியாவில் 5 லட்சம் பாகிஸ்தான் பெண்கள் இருக்காங்க- பாஜக
மும்பை: இந்தியர்களை திருமணம் செய்துவிட்டு குடியுரிமை பெறாமல் 5 லட்சம் பாகிஸ்தானிய பெண்கள் இந்தியாவில் வசிப்பதாகவும் இது பயங்கரவாதத்தின் புது வடிவம் என்றும் பாஜக எம்பி நிசிகாந்த் துபே விமர்சித்துள்ளர். பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானியர்கள் உடனே நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்ட நிலையில், பாஜக எம்பி இவ்வாறு கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பியான நிசிகாந்த் துபே, பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் புதிய வடிவம் தனக்கு கவலை அளிப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பெண்கள், இந்தியாவில் தற்போது வசித்து வருகிறார்கள்.

பயங்கரவாதத்தின் புதிய முகம்
திருமணத்திற்கு பிறகு அவர்கள் இங்கே வசிக்கிறார்கள். ஆனால், இன்னும் குடியுரிமை பெறவில்லை. பாகிஸ்தானிய பயங்கரவாதத்தின் புதிய முகம் (வடிவம்) தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் நுழைந்துள்ள இந்த எதிரிகளுக்கு எதிராக எப்படி சண்டையிடுவது? என்று கேட்டுள்ளார் .
காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவத தாக்குதலையடுத்து பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.
மோடியை புகழ்ந்து பேசியிருந்தார்
பயங்கரவாதிகளுக்கு மறைமுக ஆதரவு அளித்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட இந்தியா, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதற்கான கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அட்டாரி எல்லை வழியாக 537 பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளனர். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பிரதமர் மோடியை புகழ்ந்து இருந்தார்.
சித்ரவதை செய்து கொள்வோம்
அவர் கூறுகையில், "தண்ணீர் இல்லாமல் பாகிஸ்தானியர்கள் சாகப்போகிறார்கள். இது 56 இன்ச் மார்பு. 1960 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெறுவதற்காக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நேரு செய்தார். தற்போது இந்த ஒப்பந்தத்தை மோடி நிறுத்தியுள்ளார். நாங்கள் பாஜக தொண்டர்கள். அவர்களை சித்ரவதை செய்து நாங்கள் கொல்வோம்" என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications