வேகமாக பரவும் புதுவகை XE கொரோனா.. மும்பை மாநகராட்சி ஆம் என்கிறது.. மத்திய அரசு இல்லை என்கிறது!
மும்பை: ஓமிக்ரானின் திரிபு என கூறப்படும் XE வேரியண்ட் இந்தியாவில் முதல்முறையாக பரவிவிட்டது என மகாராஷ்டிரா அரசும், இந்தியாவில் அது போன்றதொரு வேரியண்ட் பரவவே இல்லை என மத்திய அரசும் முன்னுக்கு பின் முரணான ஒரு தகவலை கூறி வருவதால் மக்கள் குழப்பமடைந்துள்ளார்கள்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் இருந்து வருகிறது. இந்த கொரோனா ஒவ்வொரு முறையும் உருமாற்றம் அடைந்து புதிய புதிய வேரியண்டுகளை உருவாக்கி வருகிறது.
இந்த புதிய வேரியண்ட் தீவிரமாகும் போது கொரோனாவும் தீவிரமாகி முதல் அலை, இரண்டாவது அலை, 3-ஆவது அலை என வீச காரணமாக அமைந்துள்ளது. இதுவரை ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்சிகிரான், டெல்டாகிரான், ஓமிக்ரான், ஓமிக்ரான் BA.1, BA.2 என புதிய வேரியண்டுகள் வந்தன.

கொரோனா
இதனால் பல நாடுகளில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியானது. அது போல் தனி மனித வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துவிட்டது.

இந்தியாவில் கொரோனா
இதனால் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடந்த மாதத்துடன் முடிந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. அதற்கேற்ப அந்தந்த மாநிலங்களும் கொரோனா விதிகளை திரும்ப பெற்றுக் கொண்டன. மகாராஷ்டிராவில் மாஸ்க் உள்ளிட்டவை அணிய தேவையில்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

வேரியண்ட்
இதனிடையே ஜனவரி 19ஆம் தேதி பிரிட்டனில் முதல் முறையாக XE வகை வேரியண்ட் கண்டறியப்பட்டது. இது ஓமிக்ரானின் உருமாற்றமடைந்த திரிபு என தெரிவிக்கப்பட்டது. இந்த வெளிநாடுகளிலிருந்து மும்பை வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதன்படி தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி மும்பை வந்த 50 வயது பெண்ணுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் XE வேரியண்ட் இருப்பதாக மும்பை மாநகராட்சி நேற்று அறிவித்தது.

மும்பை
அதாவது இந்தியாவில் முதல் XE வேரியண்ட் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தது. கொரோனாவின் தீவிரம் அந்த அளவுக்கு இல்லாததால் நிம்மதி பெருமூச்சு அடைந்த மக்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து XE வேரியண்ட் குறித்து மக்கள் அச்சமடைய தொடங்கிவிட்டனர்.

XE வேரியண்ட்
இந்த நிலையில் இந்தியாவில் XE வேரியண்ட் கண்டறியப்படவில்லை என்றும் மும்பையில் XE வேரியண்ட் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் 50 வயது பெண்ணின் மாதிரி XE வேரியண்ட் பிறழ்வுடன் ஒத்து போகவில்லை. மேலும் அந்த பெண் முழு தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்பதால் இந்த புதிய XE வேரியண்டிற்கு வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்தது.

மாநகராட்சி என்ன கூறுகிறது
மும்பை மாநகராட்சி புதிய வேரியண்ட் இருப்பதாக சொல்லும் நிலையில் மத்திய அரசு அதை மறுக்கிறது. இதனால் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனை அரசு நடந்து வரும் நிலையில் மத்திய அரசு புதிய வேரியண்ட் பரவலை மறைப்பதற்காகவே இது போல் பொய் சொல்வதாக விமர்சனம் செய்துள்ளது.

இறப்பு, பாதிப்பு
ஏற்கெனவே மத்திய அரசு, மாநில அரசுகளின் எதிர்க்கட்சிகள் கொரோனா இறப்பையும் பாதிப்பையும் குறைத்து சொல்வதாக ஒரு விமர்சனம் வைத்திருந்தது. இந்த நிலையில் புதிய வேரியண்ட் குறித்து மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இரு வேறு கருத்துகள் நிலவி வருகிறது. இதை மும்பை மாநகராட்சி தெளிவுப்படுத்தினால் நன்றாக இருக்கும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications