வெள்ளை உடையில் வந்தார்.. சுஷாந்த் தற்கொலை.. ரியாவிடம் துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்.. யார் இவர்?
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக அவரின் காதலி ரியாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் தற்கொலைக்கு இன்னும் முழுமையான காரணம் தெரியவில்லை. இந்த தற்கொலை வழக்கை தற்போது மும்பை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
அவர் தனது மும்பை வீட்டில் நேற்று மதியம் தற்கொலை செய்து கொண்டார். வீட்டு அறையில் தூக்கு மாட்டி இவர் தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணை
இந்த நிலையில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக தற்போது விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீஸ் உறுதியாக தெரிவித்துவிட்டது. ஆனால் இந்த தற்கொலைக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. உண்மையில் அவரின் தற்கொலைக்கு மன அழுத்தம்தான் காரணமா அல்லது வேறு காரணம் இருக்கிறதா என்று விசாரணை நடந்து வருகிறது.

யாரிடம் விசாரணை
இந்த நிலையில்தான் தற்போது சுஷாந்த் சிங் காதலி என்று கருதப்படும் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர் . ரியா சுஷாந்த் சிங்கின் காதலி என்று எங்கும் அவர் உறுதியாக கூறவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் காதலில் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வந்தது. இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியானது.

வந்துவிட்டு சென்றார்
இந்த நிலையில் சுஷாந்த் சிங் உடலை பார்ப்பதற்காக ரியா இன்று மருத்துவமனைக்கு வந்துவிட்டு சென்றார். மும்பையில் உள்ள காப்பர் மருத்துவமனையில் சுஷாந்த் சிங் உடல் இருந்தது. அங்கு ரியா வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார். அவர் வெள்ளை உடையில் முகத்தை மூடிக்கொண்டு வந்தார். இவர் அங்கு வந்துவிட்டு சென்றதும், கண்ணீரோடு காரில் ஏறியதும் பெரிய வைரல் ஆகியுள்ளது.

போலீஸ் விசாரணை
இவரிடம் போலீசார் நடத்தி வருகிறார்கள். சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணம் என்ன, உங்களிடம் சுஷாந்த் சிங் என்ன சொன்னார் என்பது குறித்து ரியாவிடம் போலீசார் துருவி துருவி கேள்வி கேட்டு இருக்கிறார்கள். அவருக்கு உடலில் என்ன பிரச்சனை இருந்தது, மன ரீதியாக எப்படி கஷ்டப்பட்டார், வேறு ஏதேனும் அழுத்தம் இருந்ததா என்று ரியாவிடம் போலீசார் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Recommended Video

ஒன்றாக நடிப்பு
இதற்கு முன்பு சுஷாந்த் சிங் அங்கிதா லோகான்டே என்று பெண்ணுடன் காதலில் இருந்தார். மொத்தம் 6 வருடம் இவர்கள் காதலில் இருந்துள்ளனர். இதனால் போலீசார் இவரிடமும் விசாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதேபோல் சுஷாந்த் சிங்கின் நண்பர் நடிகர் மகேஷ் ஷெட்டியிடம் இதேபோல் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அவருடன் தான் சுஷாந்த் சிங் கடைசியாக போனில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு மையம்- 044- 2464 0050
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்- 104- ஐ அழைக்கலாம்.












Click it and Unblock the Notifications