வாக்குவங்கி அரசியல் செய்தவர்களுக்கு சம்மட்டி அடி! குறுக்கு வழி அரசியல் எடுபடாது! மோடி பெருமித பேச்சு

Subscribe to Oneindia Tamil

மும்பை: வாக்குவங்கி அரசியல் செய்தவர்களுக்கு இந்திய மக்கள் சம்மட்டி அடி கொடுத்து வருவதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இனி இந்தியாவில் குறுக்கு வழி அரசியல் எடுபடாது என்றும் தெரிவித்தார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஏராளமான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை, எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட ரூ.75,000 கோடி மதிப்பிலான திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். கூட்டத்தில் மோடி பேசியதாவது:

ஊழல் செய்வதே குறிக்கோள்

ஊழல் செய்வதே குறிக்கோள்

பாஜக ஆட்சியில் இந்தியா எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அனைத்து மாநிலங்களும், அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுசேர்ந்து முன்னேறுவதே நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதில் நம்பிக்கை கொண்ட கட்சி பாஜக. நம் நாட்டில் இன்னும் சில அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அந்தக் கட்சிகளுக்கு நாட்டின் வளர்ச்சி மீதோ, மக்களின் மீதோ அக்கறை கிடையாது. எப்படியாவது ஆட்சிக்கு வந்து ஊழல் செய்து பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்பதில் மட்டுமே அக்கட்சிகளுக்கு அக்கறை இருக்கும்.

வாக்குங்கி அரசியல்

வாக்குங்கி அரசியல்

அந்தக் கட்சிகள்தான் குறுக்குவழி அரசியலை தேர்ந்தெடுக்கும். அதாவது, குறிப்பிட்ட சமூக மக்களை திருப்திப்படுத்துவது; அவர்களுக்கு சில சலுகைகளை வழங்குவது போன்ற செயல்களில் அவை ஈடுபடும். தனது இந்த வாக்குவங்கி அரசியலுக்காக ஒட்டுமொத்த மக்களின் வரிப்பணத்தையும் அக்கட்சிகள் வாரிக் கொடுக்கும். இதுபோன்ற அரசியல் கட்சிகளிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மக்கள் கொடுக்கும் சம்மட்டி அடி

மக்கள் கொடுக்கும் சம்மட்டி அடி

ஆனால், ஒருகாலத்தில் தான் இதுபோன்ற குறுக்கு வழி அரசியல் இந்தியாவில் எடுபட்டு வந்தது. இப்போது இந்திய மக்களுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டது. வாக்கு வங்கி அரசியல் செய்பவர்களுக்கு நம் நாட்டு மக்கள் சம்மட்டி அடி கொடுத்து வருகிறார்கள். இனி குறுக்கு வழியில் அரசியல் செய்வது இந்தியாவில் எடுபடாது என அக்கட்சிகளே உணர்ந்துவிட்டன. இந்த நேரத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஒரு விஷயத்தை கூறிக்கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துங்கள். குறுக்கு வழி அரசியலை விட்டுவிடுங்கள். அப்போதுதான் இனிமேல் உங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியும்.

தோலுரித்துக் காட்ட வேண்டும்

தோலுரித்துக் காட்ட வேண்டும்

அதேபோல, மக்களும் இதுபோன்ற அரசியல் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொய் வாக்குறுதிகளை கொடுத்து அவர்கள் ஆட்சியை பிடிக்க முயற்சிப்பார்கள். அவர்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். மக்கள் அனைவருக்கும் அந்தக் கட்சிகளை தோலுரித்துக் காட்ட வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் எனது தலைமையிலான பாஜக ஆட்சியில் அனைவருக்குமான வளர்ச்சியை நாம் உறுதி செய்து வருகிறோம். இதுதான் நம் நாட்டை மேலும் முன்னேற்றும். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+