பள்ளிக்குள் நுழைந்து முதல்வரை புரட்டியெடுத்த இந்துத்துவா அமைப்பினர்! ஷாக் வீடியோ.. அதிர்ச்சி காரணம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் பள்ளிக்குள் நுழைந்த இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் முதல்வரின் சட்டை, பனியனை கிழித்து ஓடஓட விரட்டி தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது ஏன் நடந்தது? என்பது பற்றிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஏராளாமான வீடியோக்கள் பரவி வருகின்றனர். இதில் வியக்க வைக்கும் வீடியோக்கள் முதல் ஷாக் அளிக்கும் வீடியோக்களும் அடங்கும். இந்நிலையில் தான் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் பேண்ட், சர்ட் அணிந்து டீசண்டாக இருக்கும் நபரை ஒரு கும்பல் விரட்டி விரட்டி தாக்குகிறது. தாக்குதல் நடத்தும் கும்பலில் அதிகமானவர்கள் இருப்பதால் அந்த டீசண்டான நபரால் அவர்களை எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை. இதனால் அவர் தொடர்ந்து அடி வாங்குகிறார்.
மேலும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருக்கும் அந்த நபர் கிழிந்த சட்டை மற்றும் பனியனுடன் கட்டடத்திலும், படிக்கட்டுகளிலும் ஓடுகிறார். அவரை விடாமல் விரட்டி செல்லும் கும்பல் ‛ஹரஹர மகாதேவ்' கோஷத்துடன் தாக்குதல் நடத்துகிறது. இந்த தாக்குதலை சிலர் தங்களின் செல்போனில் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் எங்கு? எப்போது? நடந்தது என்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் தான் அதுபற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தாலிகான் தாபாடி டவுன் உள்ளது. இங்கு டிஒய் படேல் உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவ-மாணவிகள் ஏராளாமானவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளியின் முதல்வராக அலெக்சாண்டர் கோட்ஸ் ரீட் உள்ளார். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் அடி வாங்கியவர் இந்த அலெக்சாண்டர் கோட்ஸ் ரீட் தான். இவரை தாக்கியவர்கள் இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், பள்ளியில் தினமும் பிரார்த்தனை கூட்டம் நடக்குமாம்.
Alexzender principal of D Y patil school beaten badly by bajrang people for conducting Christian prayer in school in Talegaon Ambi morning prayer our father which art in heaven was conducted every morning in d y patil English medium school pic.twitter.com/OikmvKOeo8
— Gayatri Kachhawa 🇮🇳 (@KachhawaGayatri) July 5, 2023
இந்த பிரார்த்தனை கூட்டத்தின்போது கிறிஸ்தவ பிரார்த்தனை பாடல்களை அவர் மாணவர்களை பாட வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவ-மாணவிகளின் கழிவறை செல்லும் பாதையில் கேமரா பொருத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் தான் பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்கள் பள்ளிக்குள் நுழைந்து முதல்வர் அலெக்சாண்ட் கோட்ஸ் ரீட்டை தாக்கியதும் தெரியவந்துள்ளது.
இதுபற்றி தலேகான் எம்ஐடிசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சாவந்த் கூறுகையில், ‛‛சில பெற்றோர்கள் இந்துத்துவா அமைப்பினருடன் சேர்ந்து பள்ளி முதல்வரை தாக்கி அவரது ஆடையை கிழித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறும் இடத்தில் கேமராக எதுவும் இல்லை. ஆனால் அந்த இடத்துக்கு வெளியே உள்ளது. மேலும் தினமும் ‛ஓ லார்ட்' என துவங்கும் பாடலை பாட கூறியுள்ளனர். இது ஒரு பொதுவான பிரார்த்தனை பாடல்.
ஆனால் மாணவ-மாணவிகளின் பெற்றோர் பைபிள் வசனத்தை படிக்கும்படி வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளனர். தற்போதைய விசாரணையின்படி ஜெபத்தின் வழியிலான மதமாற்றம், பைபிள் விஷஙயங்களை படிக்க வலியுறுத்தியது பற்றி எதுவும் தெரிவில்லை. பள்ளி நிர்வாகத்திடம் இருந்து புகார் இன்னும் வரவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications