மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுதான் எனது ஷெட்யூல்.. கங்கனாவை பங்கமாக கலாய்த்த பஞ்சாபி பாடகர் தில்ஜித்

Google Oneindia Tamil News

மும்பை: வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை ஆதரித்த பிரபல பாடகர் தில்ஜித் தோசன்ஜியை விமர்சித்து கங்கனா ரனாவத் செய்த ட்வீட்டிற்கு தில்ஜித் உரிய பதிலடியை கிண்டலாக கொடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் கடந்த 17 நாட்களாக டெல்லியில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அவர்களின் போராட்டத்தையும் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

விவசாயிகள்

விவசாயிகள்

அந்த வகையில் பஞ்சாப்பின் பிரபல பாடகர் தில்ஜித் தோசன்ஜி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் போராட்டக்களத்திற்கு நேரடியாக சென்று நீங்கள் பெரிய வரலாற்றை உருவாக்குகிறீர்கள். இந்த வரலாறு எதிர்கால சந்ததியினருக்கு விவரிக்கப்படும். விவசாயிகளின் பிரச்சினைகளை யாரும் திசை திருப்பக் கூடாது.

கங்கனா

கங்கனா

விவசாயிகளின் பிரச்சினைகளை அரசு தீர்க்க வேண்டும் என தில்ஜித் பேசினார். பின்னர் கடுங்குளிரால் அவதிப்படும் விவசாயிகள் போர்வை வாங்கிக் கொள்ளுமாறு ரூ 1 கோடியை நிதியாகவும் தில்ஜித் அளித்துள்ளார். இதையடுத்து தில்ஜித்தை நடிகை கங்கனா விமர்சித்துள்ளார்.

தில்ஜித்

தில்ஜித்

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மூன்று படங்களை பகிர்ந்துள்ளார். அதில் நான் 12 மணி நேர படப்பிடிப்பிற்குப் பிறகு ஒரு தொண்டு நிறுவனத்தின் விழாவில் கலந்து கொண்டேன். இந்த மஞ்சள் உடையில் நான் எப்படியிருக்கிறேன். தில்ஜித் எங்கே, அவரை எல்லோரும் தேடுகிறார்களே என பதிவிட்டிருந்தார்.

கங்கனாவுக்கு தில்ஜித் பதிலடி

கங்கனாவுக்கு தில்ஜித் பதிலடி

இந்த நிலையில் கங்கனாவுக்கு தில்ஜித் கலாய்ப்பை பதிலாக அளித்துள்ளார். அதில் நான் காலையில் எழுந்து உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றேன். நாள் முழுவதும் வேலை செய்தேன். இப்போது தூங்க போகிறேன். இதுதான் எனது ஷெட்யூல் என ட்விட்டரில் தில்ஜித் கலாய்த்துள்ளார். தில்ஜித்தின் பதிலை ஏராளமானோர் ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள்.

English summary
Punjabi Singer Diljit gives suitable reply for Kangana Ranaut as he supported farmers protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X