ரொம்ப கோபக்காரரா இருப்பாரோ!.. இதுவரை கண்டிராத டிராவிட்டின் புது அவதார்! "அம்பலப்படுத்திய" கோஹ்லி!
மும்பை: பொறுமைசாலியான இந்திய கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட், ஒரு விளம்பரத்தில் படத்தில் மிகவும் கோபக்காரராக இருக்கும் வீடியோ காட்சிகளை விராத் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை யாராலும் மறக்க முடியாது. மிகவும் பொறுமைசாலி, களத்தில் நின்று ஆடக் கூடியவர், பொறுப்பாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை வாரிகுவித்தவர் என பலர் புகழாரம் தெரிவிக்கிறார்கள்.
கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமல்ல எங்குமே தனது கோபத்தை வெளிப்படுத்தாமல் பொறுமையின் சிகரமாக இருந்து வருகிறார். தனது பொறுமை மற்றும் சாதுர்யத்தால் மற்ற நாடுகளின் பந்து வீச்சாளர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவார்.
Never seen this side of Rahul bhai 🤯🤣 pic.twitter.com/4W93p0Gk7m
— Virat Kohli (@imVkohli) April 9, 2021
ட்விட்டர்
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டிராவிட் தற்போது 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோஹ்லி டிராவிட் குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

ஆக்ரோஷம்
அதில் ஒரு வீடியோவை போட்டு நான் ராகுல் டிராவிட்டின் இந்த பக்கத்தை பார்த்ததே இல்லை என ட்வீட் செய்துள்ளார். அந்த வீடியோ ராகுல் டிராவிட் நடித்துள்ள விளம்பரப் படமாகும். கிரெடிட் கார்டு தொடர்பான விளம்பரம் படம் அது. அதில் டிராபிக் ஜாமில் கோபமாக வசனம் பேசும் டிராவிட் காரின் பக்கவாட்டு கண்ணாடியை ஆக்ரோஷமாக உடைத்தெறிவார்.

வாகன ஓட்டி
தன்னை ஓவர்டேக் செய்யும் வாகன ஓட்டியிடம் கார் கண்ணாடியில் எதையோ தூக்கி எறிகிறார். கோபத்தை கொப்பளிப்பது போன்று உள்ளது. வெளியே வா உன்னை அடித்து நொறுக்குகிறேன் என்பார் டிராவிட். அதற்கு அந்த வாகன ஓட்டி முகத்தை பாவமாக வைத்துக் கொள்வார்.

வீடியோ
நீங்கள் நேராக போயிருக்க வேண்டும் என சொல்லிவிட்டு உடனே தனது கார் ஸ்டியரிங்கில் பலமுறை ஓங்கி அடிக்கிறார். பின்னர் காரில் ஏறி நின்று கொண்டு நான் இந்திரா நகரின் டான் என கூறி கிரிக்கெட் மட்டையை தூக்கி காட்டுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
|
பெங்களூர்
இந்திரா நகரானது பெங்களூரில் உள்ளது. இங்குதான் ராகுல் தனது வாழ்வின் பெரும்பகுதியை கழித்தார். நான் இந்திரா நகரின் டான் என ராகுல் சொல்வார் என எதிர்பார்க்கவில்லை, ஆனால் கோபமாக ராகுல் கூறியது மிகவும் அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள். இந்த கோபக்கார டான் சாலையில் செய்த அதகளத்தால் இந்திரா நகரில் உணவு டெலிவரி தாமதமாகும் என ஜொமாட்டோ ட்வீட் போட்டுள்ளது.
-
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்?












Click it and Unblock the Notifications