முகம் முழுக்க சோகம்.. ரத்தன் டாடா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த.. வீல்சேரில் வந்த பெண்! யார் இவர்?
மும்பை: ரத்தன் டாடவின் இறுதிச் சடங்கு மும்பையில் நேற்று மாலை நடந்த நிலையில், அதில் பலரும் கலந்து கொண்டனர். அப்போது வீல் சேரில் நடக்கவே முடியாத நிலையிலும் வெளிநாட்டுப் பெண் ஒருவர் ரத்தன் டாடா இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு இருந்தார். யார் அவர்? அவருக்கும் ரத்தன் டாடாவுக்கும் என்ன தொடர்பு? என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டின் தலைசிறந்த பிஸ்னஸ்மேன்களில் ஒருவரான ரத்தன் டாடா கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் ரத்த அழுத்தம் குறைந்ததாகக் கூறப்பட்டது.

மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், செவ்வாய்க்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது உடல் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்கு நேற்று மாலை நடந்தது. இதில் டாடா குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.
இந்த இறுதிச் சடங்கில் ரத்தன் டாடாவின் சகோதரர் ஜிம்மி நேவல் டாடா கலந்து கொண்டார். ஜிம்மி நேவல் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் வீல்சேரில் இருந்தபடியே கலந்து கொண்டார். ரத்தன் டாடாவின் உடன் பிறந்த சகோதரராக இருந்தாலும் ஜிம்மி நேவல் டாடா குடும்ப பிஸ்னஸில் ஆர்வம் காட்டவில்லை. அவர் மும்பையில் அமைதியான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்.
சாதாரண 2BHK வீடு.. சொந்தமாக செல்போன் கூட இல்லை.. ரத்தன் டாடாவின் தம்பி ஜிம்மி டாடா பற்றி தெரியுமா!
அங்கு எளிமையான 2 BHK வீட்டில் வசிக்கும் ஜிம்மி டாடா செல்போன் கூட வைத்திருப்பதில்லை எனச் சொல்லப்படுகிறது. அதேநேரம், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களில் அவருக்குக் கணிசமான பங்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல ரத்தன் டாடா இறுதிச் சடங்கில் வயதான பெண் ஒருவர் வீல் சேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். வெளிநாட்டைச் சேர்ந்த பெண் போலத் தெரிந்த அவர் முகம் முழுக்க சோகம் இருந்தது. வயது மூப்பால் உடல்நிலை சரி இல்லாத போதிலும் கஷ்டப்பட்டு வீல் சேரில் வந்து ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு இருக்கிறார். இது தொடர்பான போட்டோ, வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், பலருக்கும் இவர் யார் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. யார் அவர்? ரத்தன் டாடவுக்கும் அவருக்கு என்ன தொடர்பு என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
30+ கம்பெனிகள், லட்சம் கோடி வருவாய்! ஆனாலும் பணக்காரர்கள் லிஸ்டில் ரத்தன் டாடா இல்லையே ஏன் தெரியுமா?
அந்த வயதான பெண்ணின் பெயர் சிமோன் டாடா. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த இவர், ரத்தன் டாடாவின் தந்தையான நேவல் ஹெச் டாடாவின் இரண்டாவது மனைவி. 1930இல் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பிறந்த இவர், ஜெனிவா பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். 1953இல் ஒரு சுற்றுலாப் பயணியாக இந்தியா வந்த சிமோன், எதிர்பாராத விதமாக நேவல் டாடாவை சந்தித்தார். இருவரும் காதலிக்கத் தொடங்கியனர். இதையடுத்து நேவல் டாடா தனது முதல் மனைவியான (ரத்தன் டாடாவின் தாய்) சூனி டாடாவை விவாகரத்து செய்து கொண்டு, 1955இல் சிமோனை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஒரு சுற்றுலாப் பயணியாக இந்தியா வந்த சிமோன் டாடா நிரந்தரமாகவே மும்பையில் குடியேறினார். டாடாவின் ப்யூட்டி நிறுவனமான லேக்மீயை (Lakme) சர்வதேச அளவில் எடுத்துச் சென்றதில் இவரது பங்கு முக்கியமானது. 1962ல் இவர் லேக்மீ இணை இயக்குநராகச் சேர்ந்த நிலையில், 1982இல் லேக்மீ தலைவரானார். பின்னர், 1987இல், அவர் டாடா இண்டஸ்ட்ரீஸ் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications