வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளீர்களா? ஆர்பிஐ கொண்டு வந்த புது மாற்றம்.. முதல்ல இதை படிங்க!
மும்பை: இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு குறித்த அச்சமும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் இரட்டை அங்கீகாரம் (Two-Factor Authentication - 2FA) முறை கட்டாயமாக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதன் மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார், UPI மற்றும் மொபைல் வாலெட் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கும் 2FA விதி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் சாமானிய மக்களுக்கு என்ன நன்மை..? பேமெண்ட் செய்யும் போது என்ன மாற்றங்கள் வந்துள்ளது..? Z

ஏன் 2FA முறை தேவை?
தற்போது நடைமுறையில் இருக்கும் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் பணத்தை அனுப்பவோ அல்லது பேமெண்ட் செய்யவோ ஒரே ஒரு அங்கீகார முறை அதாவது OTP அல்லது PIN இருந்தால் போதுமானதாக இருக்கிறது. ஆனால் டிஜிட்டல் மோசடியாளர்கள் இப்போது ஃபிஷிங் அட்டாக், போலி அழைப்புகள், SIM ஸ்வாப் போன்ற ஏமாற்று வழிகளைப் பயன்படுத்தி சாமானிய மக்களிடம் இருந்து இந்த விவரங்களைத் எளிதாக திருடி வருகின்றனர். இதனால் ஒரு கட்ட பாதுகாப்பு என்பது இனி வரும் காலத்தில் போதுமானதாக இருக்காது.
இதனால் இரட்டை அங்கீகார முறையை ஆர்பிஐ கொண்டு வர உத்தரவிட்டுள்ளது, ஒரு அங்கீகார முறையின் தகவல்களை மோசடியாளர் பெற்றாலும், இரண்டாவது அங்கீகாரம் முறையை பெறவது கடினமாகும். 2வது அங்கீகாரம் முறை என்பது PIN, பயோமெட்ரிக் அல்லது மற்றொரு OTP ஆக கூட இக்கலாம்.
இத்தகைய 2 அடுக்கு பாதுகாப்பை கொண்டு வருவது மூலம் மோசடிகள் பெரிய அளவில் குறைக்க முடியும், எளிதாக மோசடியாளர்கள் பணத்தை திருட முடியாது. காரணம் PIN, பயோமெட்ரிக் தரவுகள் என்பது ஒவ்வொரு தனிநபரிடம் இருப்பது, OTP போல் எளிதாக ஃபிஷிங் அட்டாக் மூலம் திருட முடியாது.
எனவே இந்த 2FA பாதுகாப்பு முறை மூலம் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைக்க உதவும். சுருக்கமாகச் சொன்னால், உங்கள் வீட்டு கதவுக்கு ஒரு பூட்டுக்கு பதிலாக இரண்டு பூட்டுகள் வைப்பது போன்றது. ஒன்று உடைந்தாலும் மற்றொன்று பாதுகாப்பை உறுதி செய்யும். ஆனால் சாவியை பத்திரமாக வைத்திருப்பது உங்கள் கையில் தான் உள்ளது. உங்களுடைய PIN-ஐ யாரிடமும் சொல்ல கூடாது.
RBI ஏன் இந்த விதியை அமல்படுத்துகிறது?
டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. UPI, கார்டு, வாலெட் போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை அதிக எண்ணிக்கையில் மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களின் பணத்தைப் பாதுகாக்கும் பொருட்டு RBI இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யும் சூழலை உருவாக்குவதே RBI-யின் நோக்கம்.
ஏப்ரல் 1 முதல் ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் இரண்டு அங்கீகார முறை தேவைப்படும். உதாரணமாக, UPI பரிவர்த்தனை செய்யும்போது OTP-க்கு பதிலாக PIN அல்லது கைரேகை போன்ற இரண்டாவது ஒப்புதலை பயனர் கொடுக்க வேண்டியிருக்கும். இது சற்று கூடுதல் நேரம் எடுக்கலாம், ஆனால் உங்கள் பணத்தை மிகவும் பாதுகாப்பாக வைக்கும்.
குறிப்பாக 2ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை நகரங்கள், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்தி வரும் நிலையில், இந்தப் புதிய விதி அவர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும். மோசடி அபாயம் குறையும் என்பதால், டிஜிட்டல் பண அமைப்பின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு, இந்தியாவின் டிஜிட்டல் பண பரிமாற்ற அமைப்பை கூடுதலாக பாதுகாக்கும் ஒரு முக்கிய படியாகும். இனி ஒவ்வொரு பரிவர்த்தனையும் இரண்டு அடுக்கு பாதுகாப்புடன் நடைபெறும். இது சற்று சிரமமாகத் தோன்றினாலும், உங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாகும். RBI-யின் இந்த முயற்சி, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுவான அடித்தளத்துடன் முன்னெடுத்துச் செல்ல உதவும்.












Click it and Unblock the Notifications